Share on Social Media


ராஜ்யசபாவில் மேஜை மீது ஏறி ரகளை செய்து, பொருட்களை துவம்சம் செய்தவர்கள் எம்.பி.,க்களே அல்ல. ஜனநாயகத்தின் கோவிலுக்கு அவர்கள் மறக்க முடியாத பாவத்தை செய்து விட்டனர். மக்களின் நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்ட இத்தகைய எம்.பி.,க்களுக்கு எந்த மரியாதையும் அளிக்கக் கூடாது.
– தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி

‘நாளைக்கே அந்த எம்.பி.,க்களில் ஒருவர், அமைச்சர் அல்லது சபாநாயகர் ஆகி, சபையை நடத்தவும் கூடும். இது தான் ஜனநாயகத்தின் வினோதம்…’ என, சொல்லத் துாண்டும் வகையில், தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி அறிக்கை.

தமிழகத்தின் நிதி நிலைக்கான வெள்ளை அறிக்கை வெளியிட்டது போல, தமிழக ஏரிகளின் எண்ணிக்கை பற்றியும் அவற்றின் தற்போதைய நிலைமை குறித்தும், மாநில அரசு வெள்ளை அறிக்கை அளிக்க வேண்டும்.
– தமிழக பா.ஜ., பொதுச் செயலர் ராகவன்

‘நிதி நிலை குறித்த அறிக்கையால், முந்தைய அ.தி.மு.க., அரசை சாட முடியும்; ஏரி நீர் அறிக்கையால் அப்படி முடியாதே…’ என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொதுச் செயலர் ராகவன் அறிக்கை.

அரசியலமைப்புச் சட்டம், 127வது திருத்தத்தின் மூலம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சீர்செய்யப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கான, ஓ.பி.சி., சமூகங்களை அடையாளப்படுத்தும் உரிமை மீட்கப்பட்டுள்ளது. அதே வழிமுறையில் இட ஒதுக்கீட்டுக்கான, 50 சதவீத உச்ச வரம்பையும் நீக்கலாமே!
– விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

‘அப்படியே, இட ஒதுக்கீடு குறித்து, சம்பந்தமே இல்லாத கட்சித் தலைவர்கள் பேசக் கூடாது; மாணவர்கள் மட்டுமே பேச வேண்டும் என்றும் சட்டம் கொண்டு வருமோ…’ என, மடக்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை.

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி சம்பந்தப்பட்ட இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினால், பா.ஜ.,வினர் கதறுவது ஏன்… தென்னை மரத்துல தேள் கொட்டுனா பனை மரத்துல நெறி கட்டுமாங்கிற மாதிரி, இங்க அடிச்சா அங்க வலிக்குதா?
– தமிழக காங்., துணைத் தலைவர் ராமசுகந்தன்

‘வேலுமணி வீட்டில் நடத்திய சோதனையால், உங்களுக்கு என்ன கிடைத்தது; இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்…’ என, மடக்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., துணைத் தலைவர் ராமசுகந்தன் அறிக்கை.

தனியார் துறையிலும் இட ஒதுக்கீடுக்கு சட்டம் இயற்ற வேண்டும் என்கிறார், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். அதன்படி, அந்த கம்பெனிகளில் போய், ‘4 மணி நேரம் மட்டுமே வேலை செய்வோம்; மாசத்துக்கு பாதி நாள் லீவு வேணும்’ என கேட்பாரோ!
– தமிழக பா.ஜ., செயற்குழு உறுப்பினர் சவுதாமணி

‘இட ஒதுக்கீடே கூடாது என்ற குரல் வலுத்து வருகையில், தனியாரிலும் இட ஒதுக்கீடா… நடக்காது…’ என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செயற்குழு உறுப்பினர் சவுதாமணி அறிக்கை.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *