sinraj inspection Tamil News Spot
Share on Social Media

இது குறித்து, நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜிடம் பேசினோம். “நான் வழக்கமாகப் போற ஆய்வுதான். எந்த மீடியாவிலும் நான் அது பற்றிச் செய்தி கொடுக்கலை. எப்படியோ அந்த வீடியோ வெளியில் வந்துவிட்டது” என்றவர், ஆய்வு பற்றிப் பேசினார்.

“அந்த காம்பவுண்ட் சுவர் மத்திய அரசின் நிதியிலிருந்து கட்டப்படுது. ரூ.27.80 லட்ச ரூபாய் மதிப்புள்ள வேலை அது. ‘தரமாக வேலை நடக்கலை’னு கம்ப்ளெயின்ட் வந்தது. அதைத் தொடர்ந்து, அன்னைக்கு ஆய்வுக்குப் போனேன். அந்த காம்பவுண்ட் சுவர் தூண்கள் தரமாக அமைக்கப்படலை. ஆறு இஞ்ச்க்கு ஒரு ரிங் அமைக்கணும்.

சின்ராஜ் எம்.பி ஆய்வு

சின்ராஜ் எம்.பி ஆய்வு

ஆனால், ஒரு மீட்டர் அளவில்கூட ரிங் அமைக்கலை. அடிமட்டமும் தரமாக இல்லை. அந்தத் தூண்களில் ஒன்றில் இருந்த கம்பியை பிடிச்சு லேசாக இழுத்தேன். பொலபொலனு சிமென்ட் கலவை கொட்டுது. `இந்த வேலை தரமாக இல்லை. மறுபடியும் தரமாக பணியைச் செஞ்சு முடிக்கணும். இல்லைன்னா, நிதி உங்களுக்கு சேங்ஷன் ஆகாது’னு அதிகாரிகளையும், கான்ட்ராக்டரையும் எச்சரித்தேன்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *