Share on Social Media


`எக்மோ கருவி உதவியுடன் நடிகர் விவேக்கின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆஞ்சியோபிளாஸ்டி செய்து அவருக்கு இதயக் குழாய் அடைப்பும் நீக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டது காரணமல்ல’ என தெளிவுபடுத்தப்பட்டது.

இந்லையில், நடிகர் விவேக்கின் நண்பரும் நடிகருமான மனோபாலாவை தொடர்பு கொண்டோம். “நானும் விவேக்கும்தான் நேத்து ஒண்ணா போய் தடுப்பூசி போட்டுக்கிட்டோம். நான் என்னோட ரெண்டாவது டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கிட்டேன். விவேக் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கிட்டார். எனக்கு இப்போ சோர்வாவும் லேசான காய்ச்சலும் இருக்குறதால ஓய்வுல இருக்கேன்.

அதனால, விஷயத்தை கேள்விப்பட்டதும் நேரடியா மருத்துவமனைக்குப் போய் விவேக்கை பார்க்க முடியலை. அவர் கூடவே இருந்த நண்பர் உதய்கிட்டதான் அவருடைய உடல்நிலை பத்தி விசாரிச்சேன். கொஞ்சம் க்ரிடிக்கல் கண்டிஷன்னு சொல்றாங்க. சிகிச்சையில் இருக்கார்.

நேத்து நான் கொஞ்சம் உடம்பு சரியில்லாம இருந்தபோது, என்னை கிண்டல் பண்ணிட்டு ஜாலியா இருந்தாரு விவேக். மாரடைப்புங்கிறது யாருக்கு எப்போ வரும்னு நம்மால கணிக்கவே முடியாதுல்ல?

`தடுப்பூசிதான் விவேக்கு மாரடைப்பு ஏற்பட்டதுக்குக் காரணமா?’னு ஒரு பேச்சு போயிட்டு இருக்கு. அதுக்கும் இதுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. விவேக் ரசிகர்களுக்கு நான் சொல்ல விரும்புறது ஒண்ணுதான். விவேக் ரொம்ப தைரியசாலி. இதுக்கெல்லாம் பயப்பட மாட்டார். சீக்கிரமே திரும்பி வருவார்”.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *