Share on Social Media

பொருந்தாத உடை, சிரிப்பை வரவழைக்கும் ஒப்பனை என ஜோக்கர்களின் திறமையை அதிகம் கொண்டாடியது 80’ஸ், 90’ஸ் கிட்ஸ்தான். இப்போது, வறுமையில் வாடும் அவர்களின் நிலை துயரிலும் பெருந்துயரம். அப்படியொரு, துன்பம் மிகுந்த வாழ்க்கையை வாழ்ந்துவரும் சர்க்கஸ் ஜோக்கர்தான் திருப்பதி.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்துள்ள சின்ன வேப்பம்பட்டு கே.கே.கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. இரண்டரை அடி மட்டுமே உயரமுடைய மாற்றுத்திறனாளியான இவர், சிறு வயதிலிருந்தே தன் உடல் குறைபாடுகளால், துன்ப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். வீட்டில் கடைக்குட்டியாகப் பிறந்த திருப்பதிக்கு மட்டும் உடலில் இப்படியான சவால்.

நடிகர் சூர்யாவுடன் திருப்பதி

நடிகர் சூர்யாவுடன் திருப்பதி

வளர் பருவத்தில் கேலி, கிண்டலுக்கு ஆளானதுடன், 20 வயதை எட்டியப் பின் உடன் பிறந்தவர்களாலும் ஒதுக்கப்பட்டிருக்கிறார். இருந்தபோதும், தன்னம்பிக்கையோடு கடுமையாகப் போராடியிருக்கிறார் திருப்பதி. ஜோக்குகளால் மற்றவர்களைக் கவரும் திறமை தன்னிடமிருப்பதால், சினிமா வாய்ப்புத் தேடியும் அலைந்திருக்கிறார். சினிமாவில் வாய்ப்புக் கிடைக்கும் வரை வயிற்றுப் பிழைப்புக்காக சர்க்கஸில் வேலைக்குச் சேர்ந்த திருப்பதிக்கு ஜோக்கர் வேடம் கிடைத்திருக்கிறது. கடைசியாக, ஜோக்கர் வேடமே நிரந்தரமாகிவிட்டது. ராஜ்கமல் சர்க்கஸ், கிரேட் இந்தியன் சர்க்கஸ், கேரளா சர்க்கஸ் எனப் பல்வேறு சர்க்கஸ் கம்பெனிகளில் தன் திறமையைக் காட்டியிருக்கிறார். ஆனாலும், தினக்கூலி அடிப்படையில் 100, 200 ரூபாய் மட்டுமே அவருக்குச் சம்பளமாகக் கொடுத்திருக்கிறார்கள்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *