Share on Social Media


மொராதாபாத்: நாடு பிரிவினைக்கு, காங்கிரஸ் கட்சி தான் காரணம் என ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைஸி தெரிவித்துள்ளார்.

உ.பி.,யில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், சுஹெல்தேவ் பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஓபி ராஜ்பார் கூறும்போது, முகமது அலி ஜின்னாவை இந்தியாவின் முதல் பிரதமராக ஆக்கியிருந்தால், நாடு பிரிவினையை சந்தித்திருக்காது எனக்கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேரணி ஒன்றில் ஓவைஸி பேசியதாவது: உண்மையான வரலாறு தெரியாத ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., மற்றும் சமாஜ்வாதி கட்சிக்கு நான் சவால் விடுகிறேன். முஸ்லிம்களால் நாடு பிரிவினையை சந்திக்கவில்லை. ஜின்னாவால் ஏற்படவில்லை. அப்போது, நவாப்கள் மற்றும் பட்டம் பெற்றவர்கள் போன்ற செல்வாக்கு மிகுந்தவர்களால் மட்டுமே ஓட்டுப்போட முடியும். அன்றைய காங்கிரசும், அதன் தலைவர்களுமே பிரிவினைக்கு காரணம். இவ்வாறு ஓவைஸி பேசினார்.

latest tamil news

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *