Share on Social Media

மாலத்தீவு வரலாறு

மாலத்தீவு குட்டி நாடாக இருந்தாலும் இந்த நாட்டுக்குத் தனிப் பாரம்பரியம் உள்ளது. ஆரம்பத்தில் கிராவரு என்ற தமிழர்கள் அங்கு ஆட்சி புரிந்ததாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின்னர் சோழர்கள் ஆட்சிக் காலத்தில் அவர்கள் ஆட்சியின் கீழ் நீண்ட காலமாக மாலத்தீவு இருந்துள்ளது. இதன் பிறகு சிங்களவர்கள் மாலத்தீவை கைப்பற்றி ஆட்சி செய்துள்ளனர். அப்போது, அங்கு பரவலாக புத்த மதம் பின்பற்றப்பட்டுள்ளது.

தொலைகிழக்குப் பகுதிகளுக்குச் சென்ற அரேபிய வணிகர்கள், தங்கள் பயணத்தின் நடுவே மாலத்தீவில் தங்கிச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டனர். முஸ்லிம்களுக்கு மாலத்தீவு மிகவும் பிடித்து விட்டது. அங்கு, தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தி ஆட்சியில் அமர்ந்தனர். 1153-ம் ஆண்டு சுல்தான் ஆட்சி முறை வந்தது. அங்குள்ள மக்கள் அனைவரும் இஸ்லாமியர்களாக மாறத்தொடங்கினர்.

மாலத்தீவு | Maldives

மாலத்தீவு | Maldives

போர்ச்சுக்கீசியர் வருகை!

16-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய ஆதிக்க சக்திகள் பலவும் இந்தியப் பெருங்கடலில் உள்ள வணிகத்தில் பெரும் பகுதியை தங்கள் கைவசமாக்கிக் கொண்டார்கள். பிரிட்டன், பிரான்ஸ், போர்ச்சுகல், ஹாலந்து, டென்மார்க், ஸ்பெயின் என பல நாடுகளுக்கும் இதில் பெரும் போட்டி நிலவியது.

ஏற்கெனவே மேற்கிந்தியாவில் இருந்த கோவாவில் அழுத்தமாகக் காலூன்றியிருந்த போர்ச்சுக்கீசியர்கள், இந்தியப் பெருங்கடலில் லாபத்தை ஈட்டும் வணிக வழித்தடங்களில் தங்களுக்கு நிச்சயம் பங்கிருக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்திருந்தார்கள். அவர்கள் மாலத்தீவி மீது கண் வைத்தனர். ‘உங்களுக்காக சின்னதாக ஒரு கோட்டையும், தொழிற்சாலையும் கட்டிக் கொள்ளலாம்’ என்று அனுமதி அளித்தார் அப்போதைய மாலத்தீவு மன்னர். போர்ச்சுக்கீசிய ஒட்டகம் மாலத்தீவில் நுழைந்தது. 1558-ம் ஆண்டில் போர்ச்சுக்கீசியர்கள் மாலத்தீவு தேசத்தைக் கைப்பற்றினார்கள்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *