Share on Social Media


அவனியாபுரம்:நாடாளுமன்ற தேர்தலைப்போன்று சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என வெங்கடேசன் எம்பி தெரிவித்தார்.மதுரை வில்லாபுரத்தில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநாடு நடந்தது. இதில் மதுரை எம்பி வெங்கடேசன் கலந்து கொண்டார். பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு பொங்கல் பரிசாக அரிசி அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு ரூ.2500 வழங்கவுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜ இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு  வருடம் ரூ.6000 கொடுக்கப்படும் என்று அறிவித்தது.

 ஆனால் தமிழக மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் தகுந்த பாடம் புகட்டினர். அதேபோல் அதிமுகவுக்கும் வரும் சட்டமன்ற தேர்தலில் தகுந்த பாடம் புகட்டி திமுகவை வெற்றி பெற செய்வார்கள். டெல்லியில் போராடும் விவசாயிகளை நாடு முழுவதும் அனைவரும் ஆதரிக்கின்றனர்.அனைத்து பகுதிகளிலும் இருந்து விவசாயிகள் டெல்லியை சுற்றி கடும் குளிரையும் உயிரையும் பொருட்படுத்தாமல் சாலைகளில் குவிந்து வருகின்றனர். இது நன்கு திட்டமிடப்பட்ட நவீன போராட்டம் ஆகும். ரஜினியின் அறிக்கை சமுதாயத்திற்கு மிக சிறந்த பங்களிப்பாகும்’ என்றார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *