Share on Social Media


திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, நேற்று மக்களவையில், நகரத்தூய்ைம தரவரிசையில் 12ம் இடம் பெற்று கடைசி இடத்தில் உள்ள தமிழகத்தின் நிலையை முன்னேற்ற, ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் என்னென்ன?, கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் தூய்மையைப் பராமரிக்க எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது?, நிலைமையை சீரமைக்க ஏதேனும் முயற்சிகள் உள்ளதா? என்று, ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத் துறை அமைச்சர் கௌசல் கிஷோரிடம் விரிவான கேள்வியை எழுப்பினார். இதற்கு ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத் துறை இணையமைச்சர் அளித்த பதில்: 100க்கும் அதிகமான நகர்ப்புற அமைப்புகள் உள்ள 13 மாநிலங்களில், தமிழ்நாடு 12வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசால் நகர்ப்புற அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிதி ஆதாரம், திடக்கழிவு மேலாண்மையில் நகரங்களின் செயலாக்கம், பொதுக் கழிப்பிடங்களின் வசதி மற்றும் கழிவுநீர் மேலாண்மை ஆகிய மூன்று காரணிகளின் மூலம் நகரங்கள் வகைப்படுத்தப்பட்டு, அதனடிப்படையில் மாநிலங்களின் செயல்பாடு கணக்கிடப்படுகிறது. நகரத் தூய்மை திட்டத்தில் 1200 கோடி ரூபாய், தமிழக அரசிற்கு வழங்கப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் மேலாண்மை, நீடித்த தூய்மையை உறுதிப்படுத்துதல், மக்களிடம் விழிப்புணர்வைப் பெருக்குதல், அரசின் உடனடி செயல்பாடுகள் ஆகியவற்றின் மூலம், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, அதாவது 2026 வரையிலான காலகட்டத்திற்கு ரூபாய் 1,41,600 கோடி அளவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்தியாவின் நகர்ப்புற அமைப்புகள் பெருமளவில் தூய்மையான இந்தியா திட்டத்திற்கு வலுசேர்க்கும். இவ்வாறு அவர் கூறினார். ஒன்றிய அமைச்சர் மக்களவையில் தெரிவித்த தகவல்களின்படி பார்க்கும்ேபாது, சென்ற ஐந்து ஆண்டுகளில் ஒன்றிய அரசு நகரத்தூய்ைம திட்டத்தின்கீழ் தமிழகத்திற்கு 1200 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. இந்த நிதியை அதிமுக அரசு முைறயாக பயன்படுத்தாமல் அலட்சியமாக இருந்ததால் தரவரிசைப் பட்டியலில் 13 மாநிலங்களில், தமிழகம் 12ம் இடத்தில் இருப்பது தெரியவருகிறது.

மதுரை எய்ம்ஸ் திட்டம்
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தது தொடர்பாகவும், மருத்துவமனை கட்டுவதற்கான திட்ட பணிகளை மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட நிதி  தொடர்பாகவும் மக்களவையில் பீகாரை சார்ந்த உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு ஒன்றிய சுகாதாரத் துறை  இணையமைச்சர் பாரதி பிரவீன் பவர், எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள  பதிலில், ‘உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் அசாம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்டப் பணிகளுக்காக கடந்த 2019-2020 நிதியாண்டில் ரூ.3.12 கோடியும், 2020-2021ம் நிதியாண்டில் ரூ.4.23 கோடி என மொத்தம் ரூ.7.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது,’ என தெரிவித்துள்ளார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *