Share on Social Media


’டைரக்‌ஷன் டச்’ என்றொரு வார்த்தை எப்போதில் இருந்து திரையயுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் புழக்கத்தில் இருக்கத் தொடங்கியது என்று தெரியவில்லை. ஆனால் இவரின் வருகைக்குப் பிறகுதான், இவரின் படங்களைப் பார்த்துவிட்டுத்தான், இவரின் படக்காட்சிகளையும் வசனங்களையும் கொண்டுதான் ‘டைரக்‌ஷன் டச்’ என்ற வார்த்தை அறிமுகமாகியிருக்கிறது. அந்த ‘டைரக்‌ஷன் டச்’சில் சிகரம் தொட்ட இயக்குநர்… கே.பாலசந்தர்.

நடிகர்களின் பக்கம் இருந்த ரசிகப் பார்வையை இயக்குநர்களின் பக்கம் திருப்பியதில் இயக்குநர் ஸ்ரீதருக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. அதில் கொஞ்சம் கூட செய்கூலியோ சேதாரமோ இல்லாமல், இன்னும் எல்லை விஸ்தரித்து ‘இது கே.பி. படம்’ எனும் முத்திரையைக் குத்தி பாலசந்தர் படைத்திட்டவை ஏராளம். ‘இது ஸ்ரீதர் படம்’ என்று கொண்டாடினார்கள் ரசிகர்கள். அதேபோல், அந்தப் பாதையில் தனித்துவத்துடன் இன்னும் கூடுதல் அழகையும் கூர்மையான புத்திசாலித்தனத்தையும் வசனங்களிலும் காட்சிகளிலும் வைத்து நகாசு பண்ணினார் கே.பாலசந்தர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *