Share on Social Media


சென்னைவாசிகள் எனக்கு அனுப்பி வைக்கும் சாக்கடை நீரையும் கழிவையும் வைத்து நான் சில `ரசவாத வித்தைகள்’ செய்கிறேன். அதாவது, அந்தக் கழிவுப் பொருட்களை விஞ்ஞான முறையில் `பிரபல வியாதி’களாக மாற்றி ஜனங்களுக்கே மீண்டும் விநியோகித்து விடுகிறேன்!

இதைச் செய்வதற்காக நான் கோடானு கோடி வீரர்கள் கொண்ட `கொசுப் படை’ ஒன்றை வளர்த்து வருகிறேன்.

ஜனங்களுக்கு வருகிற `காய்ச்சல்’களிலேயே ரொம்பவும் உயர்தரமான மலேரியா காய்ச்சலை எங்கள் கொசுப் படையினர்தான் உற்பத்தி செய்கிறார்கள்.

கூவம் ஆறு

கூவம் ஆறு
Photo: Srinivasulu.V / Vikatan

கூவத்திற்குக் கிளை நதிகளும் இருக்கின்றன. அவை தெருக்களில் ஏராளமாக ஓடுகின்றன. சில பகுதிகளில் அவை பிரம்மபுத்ரா நதி உடைப்பெடுத்துப் பிரவகிப்பதுபோல் ஆங்காங்கே வெள்ளக் காடாகப் பிரவாகம் செய்கின்றன.

அது மட்டுமா? சாக்கடைத் தண்ணீரின் போக்குவரத்துச் சாதனமான ‘பீப்பாய் வண்டிகள்’, வறண்டு கிடக்கும் தெருக்களிலெல்லாம் சாக்கடை நீரை அபிஷேகம் செய்து குளிர வைக்கின்றன!

கோடம்பாக்கத்தில் ‘பேசும் படம்’ அலுவலகத்துக்கு எதிரே போய்ப் பாருங்கள்; தெரு ஓரத்தில் சாக்கடை நீரைப் பீப்பாய் பீப்பாய்களாகக் கொண்டு வந்து கொட்டுகிறார்கள்!

“பாருங்கள் சார், நாற்றங்கால்வாய் கரையிலே குடியிருக்கும் எங்கள் கதியை! நாங்க ஒன்றும் கார்ப்பரேஷனுக்கோ கவர்ன்மென்ட்டுக்கோ தெரியாமல் இங்கே குடியிருக்கவில்லை. நாங்க இருக்கிறது எல்லாருக்கும் தெரியும். எலெக்ஷன் சமயத்திலே ஞாபகமா ஓட்டுக்கேட்க வந்துவிடுகிறார்களே! ஓட்டு வாங்கிக்கொண்டு போனால், போனதுதான்! அப்புறம், அடுத்த எலெக்ஷனுக்குத்தான் திரும்பி வராங்க. லைட் இல்லை, குடிநீர் இல்லை என்பதெல்லாம் சொல்லிச் சொல்லி அலுத்துப் போன விஷயங்கள். ஆனால், மனுஷர்கள் குடியிருக்கிற இடத்துக்குப் பக்கமாக ஓடுகிறதே சாக்கடை, அதைச் சுத்தம் பண்ண வேண்டும் என்றாவது நினைக்கவேண்டாமா? கூழோ கஞ்சியோ, நமக்குக் கிடைக்கிறதை நிம்மதியா குடிக்க முடியலே. `கப் கப்’பென்று சாக்கடை நாற்றம் அடித்து, சாப்பிட்டதை வெளியிலே கொண்டாந்துடுது. தின்னும் பதார்த்தம், குடிக்கும் நீர் எல்லாத்துலேயும் கொசு வந்து குத்துது” என்கிறார் ஜோதி நகரில் இருக்கும் ஆர்.வீரராகவன்.

மேலும்,

  • கூவத்தின் தூய்மைக்காக அப்போதைய அரசு என்ன செய்தது?

  • அப்போது அரசு அறிவித்த புது படகுத் திட்டம்…?

முழு கட்டுரையை வாசிக்க: http://bit.ly/2M1IEBN



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *