Share on Social Media


புதுடில்லி: நாகாலாந்து மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என பார்லி.,யில் காங்., உள்ளிட்ட எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் எம்.பி.,க்கள் மணீஷ் திவாரி, மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தனர். இன்றைய பார்லி., இரு அவைகளிலும் நாகாலாந்து சம்பவம் எழுப்பப்பட்டது.

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு ஜனநாயகத்திற்கு எதிரான சம்பவம் என உறுப்பினர்கள் பேசினர். காங்., எம்.பி., கவுரவ் கோகை பேசுகையில் இந்த சம்பவத்தில் தொடர்பு உடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பி சுப்ரியா சுலே, ‘துப்பாக்கிச்சூட்டில் பலியானா 16 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்’ என்றார்.இந்த பிரச்சனையால் அவை அவ்வப்போது ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து அமித்ஷா மாலை விளக்கம் அளிப்பதாக தெரிவித்தார்.

latest tamil news

சென்னை ஐ.ஐ.டி.,யில் தமிழ்தாய் வாழ்த்து பாட வேண்டியதன் அவசியத்தை திமுக எம்பி., தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தினார்.
அதிமுக உறுப்பினர் தம்பித்துரை நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதாகவும் இதனை மேம்படுத்த போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேசினார். ஆனால் இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் நிலத்தடி நீர் வளம் நன்றாக இருப்பதாக தெரிவித்தார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *