Share on Social Media


பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரை அடுத்த மாதம் 22ல் கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குளிர் கால கூட்டத்தொடர்

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 19ல் கூடியது. புதிய வேளாண் சட்டம், ‘பெகாசஸ்’ போன் ஒட்டு கேட்பு விவகாரம் உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டன.இதனால் கூட்டத் தொடரை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மழைக்கால கூட்டத் தொடர் திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே ஆக., 11ல் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் குளிர்கால கூட்டத் தொடரை அடுத்த மாதம் 22ல் துவக்கி, டிச., 23 வரை ஒரு மாதம் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாகவே நவ., 15ல் கூட்டம் துவங்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

latest tamil news

முடக்க திட்டம்

கொரோனா தடுப்பு நெறிமுறைகள் முன்பு போல தீவிரமாக இல்லாத காரணத்தால் உறுப்பினர்கள் பரிசோதனை சான்றிதழ் இன்றி சபைக்கு வர அனுமதிக்கப்படுவர் என தெரிகிறது.மழைக்கால கூட்டத் தொடரின் போது அமளியால் சபை நடவடிக்கையை முடக்கியதை போல, குளிர்கால கூட்டத் தொடரையும் முடக்க திரிணமுல் காங்., மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *