Share on Social Media

ஒசாகா விலகியதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரெஞ்சு டென்னிஸ் சங்கத்தின் தலைவர் ஜில்லெஸ் மொரடான், “ஒசாகாவுக்காக வருந்துகிறோம். இது எதிர்பாராத ஒரு விஷயம். அவர் விரைவில் மீண்டு வரவேண்டும் என்றும், அடுத்த ஆண்டு இத்தொடரில் பங்கேற்கவேண்டும் என்றும் விரும்புகிறோம். மற்ற அனைத்து கிராண்ட் ஸ்லாம்களையும் போல, வீரர்களின் மனநலனையும் மற்ற திறன்களையும் மேம்படுத்த எங்களால் முடிந்த வகையில் முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். அதில், மீடியாவும் ஒரு அங்கம்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அதற்கு மேல் கேட்கப்பட்ட எந்த கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்கவில்லை.

பிரெஞ்சு ஓப்பன் அமைப்பும் சரி, மற்ற வீரர்களின் பேட்டிகளும் சரி, மீடியா என்பது வீரர்களின் கடமை என்பதை நிறுவியிருக்கிறது. ஒசாகாவின் முதல் பதிவில் இருந்த காட்டம், இன்றைய பதிவில் இல்லை. ஆக, டென்னிஸ் சங்கங்களின் இந்த முடிவை வீரர்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்ற முடிவுக்குத்தான் வரமுடிகிறது. மனநிலை சரி இல்லையென்றால் வீரர்கள் விலகலாமே தவிர, விதிகள் மாற்றப்படாது என்பதைத்தான் இது உணர்த்துகிறது. ஆனால், போராளிகளுக்கு விதிமுறைகள் வொர்க் அவுட் ஆகாதே!

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *