IMG 20201015 WA0008 Tamil News Spot
Share on Social Media

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நவராத்திரி பூஜைகள் நாளை தொடங்குகின்றன. இதற்காகக் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையை ஒட்டி அமைந்துள்ள சரஸ்வதி தேவி கோயிலில் இருந்து சரஸ்வது தேவி மூலவர் சிலை திருவனந்தபுரம் கொண்டுசெல்வது வழக்கம். மேலும் குமாரகோயில் முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை சுவாமிகளும் பத்மநாபபுரம் சென்று அங்கிருந்து சரஸ்வதி தேவியுடன் திருவனந்தபுரம் செல்லும்.

ஒவ்வோர் ஆண்டும் சரஸ்வதி தேவி யானை மீதும், முருகன் மற்றும் முன்னுதித்த நங்கை பல்லக்கிலும் செல்வது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கை முன்னிட்டு தெய்வத்திருமேனிகளை வாகனத்தில் எடுத்துச் செல்ல இரு மாநில அரசுகளும் முடிவு செய்திருந்தன. இதற்கு இந்து முன்னணி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து சுவாமிகளை பல்லக்கில் எடுத்துச்செல்ல இரு மாநில அரசுகளும் அனுமதி அளித்தன.

IMG 20201014 WA0008 Tamil News Spot
உடைவாள் மாற்றும் நிகழ்வு

இதற்காக முன்னுதித்த நங்கை அம்மன் நேற்று முந்தினம் சுசீந்திரத்தில் இருந்து புறப்பட்டு பத்மநாபபுரம் வந்தார். நேற்று அதிகாலை குமாரகோயில் முருகன் பத்மநாபபுரம் வந்தடைந்தார். பின்னர் கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலையில் பாரம்பர்ய நிகழ்வான உடைவாள் மாற்றுதல் நடைபெற்றது. பின்னர் போலீஸார் அணிவகுப்பு மரியாதையுடன் சரஸ்வதி தேவி, முருகன், முன்னுதித்த நங்கை ஆகிய தெய்வத் திருமேனிகள் கேரளாவுக்குப் புறப்பட்டுச் சென்றன.

Also Read: தொல்லைகள் நீக்கும் ஷீர்டி ஸ்ரீசாயி சத்ய நாராயண பூஜை… நீங்களும் கலந்துகொண்டு சங்கல்பிக்கலாம்!

கொரோனா தொற்று வழிகாட்டுமுறை காரணமாக வழியில் பக்தர்கள் பூஜை பொருள்கள் வைத்து வழிபடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் தங்கள் வீடுகள் முன்பு விளக்கு ஏற்றி சாலை ஓரம் நின்று வழிபாடு நடத்தினர். நேற்று இரவு திருமேனிகள் குழித்துறை மஹாதேவர் ஆலயத்தில் வைக்கப்பட்டன. பல்லக்கு ஊர்வலம் இன்று காலை புறப்பட்டு தமிழக, கேரள எல்லையான களியக்காவிளையை அடைந்தது. தமிழகக் கேரள எல்லையில் இரு மாநில போலீஸார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செலுத்தி தெய்வ மூர்த்தங்களுக்கு வரவேற்பு அளித்தனர்.

IMG 20201014 WA0009 Tamil News Spot
பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சுவாமி புறப்பாடு

தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் பத்திரி நாராயணன் கேரள மாநிலம் திருவனந்தபுரம் கண்காணிப்பாளர் அசோக்குமாரிடம் ஊர்வலப் பாதுகாப்புகளை ஒப்படைத்தார். பின்னர் தெய்வத் திருமேனிகள் திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டன. இந்த தெய்வ மூர்த்தங்கள் நவராத்திரி பூஜைகள் நிறைவடைந்த பிறகு மீண்டும் பவனியாக கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கொண்டுவரப்படும். திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக்காலத்தில் இருந்தே இந்த பாரம்பர்யம் வழக்கத்தில் உள்ளது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *