Share on Social Media


நள்ளிரவு வரை இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருந்த சித்ரா

09 டிச, 2020 – 11:36 IST

எழுத்தின் அளவு:


Chitras-last-post-in-Insta

பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் மிகவும் பிரபலம் அடைந்தவர் டிவி நடிகை சித்ரா. இன்று அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை மரணம் ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிவி நடிகையாவதற்கு முன்பு டிவி தொகுப்பாளராக இருந்தவர். நல்ல தமிழ் உச்சரிப்பும், இயல்பான நடிப்பும் அவருக்கு பல ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.

அவர் அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்கு ஓரிரு மணி நேரங்களுக்கு முன்பாகத்தான் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

1607494679 Tamil News Spot

மேலும் மற்றொரு டிவி நடிகையான சரண்யா, தன்னை ஜாலியாகக் கிண்டல் செய்த ஒரு வீடியோவையும் தன்னுடைய ஸ்டோரி பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சித்ரா.

அவ்வளவு மகிழ்வான மனநிலையில் இருந்தவர் ஒரு சில மணி நேரத்திற்குள்ளாகவே தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்திற்கு எப்படி மாற முடியும் என ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

போலீஸ் விசாரணை முடிந்த பின்தான் இது பற்றிய முழுமையான தகவல்கள் வெளிவரும்.





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *