Share on Social Media


இந்த நிலையில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எனக்குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார் சசிகலா. அதில்,

`உங்கள்‌ நம்பிக்கை கண்டிப்பாக வீண்‌ போகாது. நீங்கள்‌ அனைவரும்‌ சோர்ந்து போகாமல்‌ தைரியமாக இருங்கள்‌. ஒரு சிலருடைய தேவைகளுக்காகவும்‌, விருப்பு வெறுப்புகளுக்காகவும்‌ செயல்பட்டு கொண்டிருக்‌கின்ற நம்‌ இயக்கத்தைச் சரி செய்து, மீண்டும்‌ அதைத் தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாகவும்‌, நம்‌ தலைவர்கள்‌ வகுத்த சட்ட திட்டங்களை, அவர்கள்‌ முன்னெடுத்துச் சென்ற அதே பாதையில்‌, பிறழாமல்‌ நம்‌ இயக்கத்தை கொண்டு செல்ல வேண்டும். மேலும், அரசியல்‌ எதிரிகளின்‌ கனவுகளையெல்லாம்‌ தகர்த்து, அவர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக நம்‌ இயக்கம்‌ வெளிப்படவும்‌, ஒவ்வொரு தொண்டனும்‌ அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்‌ என்று பெருமையோடும்‌, மிடுக்கோடும்‌, கர்வத்தோடும்‌ தன்னை இந்த சமூகத்தில்‌ சொல்லிக்‌ கொள்ளும்‌ வகையில்‌ நம்‌ இயக்கத்தை விரைவில்‌ மாற்றிக்‌ காட்டுவோம்‌. கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் அனைவரும் சந்தோசமாக, கவலையின்றி இருங்கள்‌. உங்களுடன்‌ தோளோடு தோள்‌ கொடுத்து உங்களுக்காக உழைக்க வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்‌.

அண்மைக்காலமாக எந்தவித காரணமும்‌ இல்லாமல்‌ காழ்புணர்ச்சியின்‌ காரணமாக உதாசீனப்படுத்தப்பட்டவர்கள்‌, ஒதுக்கப்பட்டவர்கள்‌ மற்றும்‌ தாங்களாக ஒதுங்கிக் கொண்டு செயல்படாமல்‌ இருப்பவர்கள்‌ என அனைவரும்‌ கவலைப்படாமல்‌ சிறிது காலம்‌ பொறுத்திருங்கள்‌. உங்கள்‌ மக்கள்‌ பணிகளை தொடர்ந்து செய்யுங்கள், விரைவில்‌ அ.தி.மு.க‌ நிலை மாறும்‌, தலை நிமிரும்‌, இது உறுதி” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த அறிக்கையின் மூலம் சசிகலா என்ன சொல்ல வருகிறார் என அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம்.

“எடப்பாடி பழனிசாமி & ஓ.பி.எஸ் இருவரும் தங்கள் இஷ்டத்துக்கு என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். கட்சியின் விதிகளைத் திருத்திக் கொள்ளலாம். ஆனால், சட்டம் சின்னம்மாவுக்குச் சாதகமாகவும், கட்சித் தொண்டர்கள் சின்னம்மாவுக்கு ஆதரவாகவும் இருப்பதை யாராலும் மறுத்துவிடமுடியாது. சின்னம்மாவை பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கியது தொடர்பாக, அவர் தொடர்ந்திருக்கும் வழக்கில், பொதுக்குழுவை கூட்டியது செல்லாது எனத் தீர்ப்பு வந்துவிட்டால். அதற்குப்பிறகு இவர்கள் கூட்டிய எந்தக் கூட்டமும் செல்லாமல்தான் போகும். அதேபோல, தஞ்சை சுற்றுப்பயணமாக இருக்கட்டும், சென்னையில் மூன்று நாள்கள் மழைக்கால நிவாரணம் வழங்க சென்றபோதும் சரி, சின்னம்மாவுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை நாங்கள் அருகிலிருந்து பார்த்தோம்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.