Share on Social Media


விபத்து நடந்தவுடன் எந்த வித தாமதமும் இல்லாது விபத்தில் சிக்கியவர்களைச் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதும், அவர்களுக்கு உடனடி மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதும் இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாகும். விரைவில், தமிழ்நாடு அவசர மருத்துவ சேவை சட்டம் கொண்டுவரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில், விரைவாக அணுகுதல், உயிர் மீட்பு சிகிச்சை, நிலைப்படுத்துதல், பாதிப்பைக் கட்டுப்படுத்தும் அறுவை சிகிச்சைகள், இயல்பு வாழ்க்கையை மீட்டெடுத்தல், மறுவாழ்வு சிகிச்சை என ஐந்து அம்சங்கள் முக்கிய காரணிகளாக இருக்கும்.

சாலை விபத்து

சாலை விபத்து
மாதிரிப் படம்

பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை உருவாக்கும் நோக்கில் “இன்னுயிர் காப்போம்-உதவி செய்” திட்டம் செயல்படும். இந்த திட்டத்தில் நல்ல சாலைகள், நம்மைக் காக்கும் 48 மணி நேரம், அவசர மருத்துவ சேவை சட்டம் போன்றவை முக்கிய நோக்கமாக இருக்கும். தற்போதைய நிலையில் நம்மைக் காக்கும் 48 மணி நேரம் திட்டத்தில், முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டம் இல்லாதவர்கள் கூட இந்த திட்டத்தில் பயனடையலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் உட்பட 609 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *