Share on Social Media


கொரோனா அச்சுறுத்தல், மழை, வெள்ளம் இவற்றைக் கடந்து 2021ம் ஆண்டு நிறைவடையவுள்ளது. ட்ரம்ப் தொடங்கி சின்னம்மா வரை பலர் இந்த வருடத்தின் டிரெண்டிங் டாபிக்காக வலம் வந்தனர். அப்படி பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில் இந்த வருடம் முழுவதும் ட்ரெண்டான, அதிகம் பேசப்பட்ட பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது ட்விட்டர் இந்தியா. அந்த லிஸ்ட் இதோ!

ஆல் ஏரியாலையும் விஜய்தான் கில்லி!

2021-ம் ஆண்டில் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகர்களில் விஜய் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதேபோல், அதிகம் ட்வீட் செய்யப்பட தென்னிந்தியப் படங்களில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படமே முதலிடம் பெற்றுள்ளது.

அதிகம் பேசப்பட்ட தெனிந்திய நடிகர்களில் விஜய்க்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் பவன் கல்யாண், மூன்றாவது இடத்தில் மகேஷ் பாபு, நான்காவது இடத்தில் சூர்யா, ஐந்தாவது இடத்தில் ஜூனியர். என்.டி.ஆர், ஆறாவது இடத்தில் அல்லு அர்ஜூன், ஏழாவது இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எட்டாவது இடத்தில் ராம் சரண், ஒன்பாதாவது இடத்தில் தனுஷ், பத்தாவது இடத்தில் அஜித்குமாரும் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல், அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகைகளின் பட்டியலில் கீர்த்தி சுரேஷ் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக பூஜா ஹெக்டே இரண்டாவது இடத்திலும், சமந்தா மூன்றாவது இடத்திலும், காஜல் அகர்வால் நான்காவது இடத்திலும், மாளவிகா மோகனன் ஐந்தாவது இடத்திலும், ரகுல் ப்ரீத் சிங் ஆறாவது இடத்திலும், சாய் பல்லவி ஏழாவது இடத்திலும், தம்மன்னா எட்டாவது இடத்திலும், அனுஷ்கா ஒன்பாதவது இடத்திலும் அனுபமா பரமேஸ்வரன் பத்தாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளனர்.

இதற்கு அடுத்தப்படியாக, அதிகம் ட்வீட் செய்யப்பட படங்களின் பட்டியலில் மாஸ்டர் முதலிடம் பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, வலிமை இரண்டாவது இடத்திலும், பீஸ்ட் மூன்றாவது இடத்திலும், ஜெய் பீம் நான்காவது இடத்திலும், வக்கீல் சாப் ஐந்தாவது இடத்திலும், RRR ஆறாவது இடத்திலும், சர்காரு வாரிபாட்டா ஏழாவது இடத்திலும், புஷ்பா எட்டாவது இடத்திலும், டாக்டர் ஒன்பாதவது இடத்திலும், கேஜிஎஃப் இரண்டாவது பாகம் பத்தாவது இடத்திலும் வந்துள்ளது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.