Screenshot 2020 11 02 at 2 49 00 PM Tamil News Spot
Share on Social Media

காந்தா பிரசாத் மற்றும் அவர் மனைவியிடம் பேசிய வீடியோவை அக்டோபர் 7-ம் தேதி, தனது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்திருந்தார் கவுரவ். அந்த வீடியோவில் காந்தா பிரசாத்தும் அவரின் மனைவியும், “காலை 6:30 மணிக்கு சமைக்கத் தொடங்குகிறோம். காலை 9:30 மணிக்கு பருப்பு வகைகள், கறிகள், ரொட்டிகள் மற்றும் அரிசி சாதம் ஆகிய உணவுகளுடன் எங்கள் உணவகம் செயல்படத் தொடங்குகிறது. ஆனால், கடந்த நான்கு மணி நேரத்தில் கிடைத்த வருமானம் வெறும் 50 ரூபாய் மட்டுமே. கொரோனாவுக்கு முன்பு அடுத்த நாளுக்கான வருமானமாவது கிடைத்தது. ஆனால், கொரானாவுக்குப் பிறகு நாங்கள் பெரும் துன்பத்துக்கு உள்ளாகிவிட்டோம். நாங்கள் வாழ்க்கையில் பெரும் போராட்டம் நடத்திவருகிறோம்” என்று கண்ணீருடன் தெரிவித்திருந்தனர்.

காந்தா பிரசாத்

காந்தா பிரசாத்

இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கும் நிலையில், அவர்களிடமிருந்து உதவியும் பெறாமல் சொந்த உழைப்பில் வாழும் இந்த தம்பதி குறித்த அந்த வீடியோ பெரியளவில் வைரலானது. சமூக வலைதளம் மூலம் இந்த வீடியோவைப் பார்த்தவர்கள், முதிய தம்பதியருக்கு உதவ முன் வந்தார்கள். பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், நடிகர், நடிகைகளில் ஆரம்பித்து சாமானிய மக்கள் வரை இந்த முதிய தம்பதியரின் உணவகத்துக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்து, பொருளும், நிதி உதவிகளும் அளித்தனர்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *