Share on Social Media


திடீர் மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் இன்று காலை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவம் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில் என்ன நடந்தது எனத்தெரிந்துகொள்ள விவேக்கிற்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம்.

”கடந்த பத்து நாட்களாகத் தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்தார் விவேக். தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வார். அவர் இருக்கும் தெருவைச் சுற்றி நடைப்பயிற்சியும் மேற்கொள்வார். நேற்று ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்குச் சென்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டு ‘எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்’ என்றும் வலியுறுத்திவிட்டு வந்தார்.

நடிகர் விவேக்

நடிகர் விவேக்

தடுப்பூசி போட்டுக்கொண்டதால் இன்று எந்த உடற்பயிற்சியும் மேற்கொள்ளவில்லை. காலையில் லேசான மயக்கமும், காய்ச்சலும் இருந்துள்ளது. அதன்பிறகு நெஞ்சு வலி அதிகமாகியுள்ளது. லேசான மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் விவேக்கை சேர்த்திருக்கிறார்கள். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இப்போது ஆஞ்சியோ சிகிச்சையளிக்க மருத்துவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். விவேக் சுயநினைவில் இருக்கிறார். மருத்துவர்கள் தொடர்ந்து அவரது உடல்நிலையைக் கண்காணித்துவருகிறார்கள்” என்றார்கள் விவேக்குக்கு நெருக்கமானவர்கள்.

நகைச்சுவை நடிப்பு மூலம் மக்கள் மனங்களை மகிழ்வித்த நடிகர் விவேக் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்!



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *