Share on Social Media


தவழும் குழந்தை தொடங்கி தள்ளாடும் முதியவர் வரை நடிகர் விஜயை தெரியாதவர்கள் எவரும் இல்லை.  இவரின் எதார்த்தமான நடிப்பும், குறும்பு சிரிப்பும், அசத்தலான நடமும் அனைவராலும் கொண்டாடப்படுகிறது.  அமைதியாக இருந்து பலரின் மனதை அசால்ட்டாக வென்றவர்.  இவ்வளவு புகழ் உச்சத்தில் இருந்தாலும் இவர் இன்றளவும் கல்லூரி தோழர்களுடன் எந்தவித பாரபட்சமுமின்றி நட்பு பாராட்டி வருவது இவருக்கு கூடுதல் பெருமையை அளிக்கிறது. 

ALSO READ | நயன்தாராவுடன் நடிக்கும் யூட்யூப் ஸ்டார் ரித்து!

அவரது நண்பர் கூட்டத்தில் ஒருவரான சஞ்சீவ் அனைவருக்கும் தெரிந்தவர்.  இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் நடித்துள்ளார்.  இப்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ்-5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு(Wild Card) போட்டியாளராக நுழைந்தார்.  இவர் என்ட்ரி ஆனதிலிருந்தே இந்நிகழ்ச்சி அதிகம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது என்றும் கூறலாம்.

சக போட்டியாளர்கள் செய்யும் தவறுகள் குறித்தும், அவர்களை பற்றி தோன்றும் கருத்துக்களையும் நெத்தியில் அடித்தது போல நச்சென்று சொல்லுவார்.  இவரின் இந்த துணிச்சலான கருத்துக்கென்றே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும்  சஞ்சீவ் துணிச்சலாக கருத்தை எடுத்துரைப்பதாக பாராட்டி சென்றனர்.  நடிகர் விஜயும் கூட இந்நிகழ்ச்சியை பார்த்துவிட்டு சஞ்சீவ் நன்றாக விளையாடுகிறார் என்று கூறியதாக சமீபத்தில் சஞ்சீவினி மனைவி ப்ரீத்தி கூறினார்.

இந்நிலையில் சஞ்சீவ், தனது நண்பரான நடிகர் விஜயை பற்றி பேட்டியில் கூறிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.  அந்த பேட்டியில் அவர் கூறுகையில், “விஜய்யின் நெருங்கிய நண்பரான நீங்கள் ஒரு சில படங்களிலேயே நடித்துள்ளீர்கள், விஜய் உங்களுக்கு படங்களில் நடிக்க உதவ மாட்டாரா என்று பலர் கேட்கின்றனர்.  ஆனால் எங்கள் நண்பர்கள் குழுக்குள் ஒரு கொள்கை வைத்துள்ளோம்.  அதாவது தொழில்ரீதியாக யாரும் யாரிடமும் எந்தவித உதவியையும் கேட்க கூடாது என்பதே.

sanjeev

இதுவே என் குடும்பத்தில் ஒரு பிரச்சனையாக ஏற்பட்டாலோ அல்லது பொருளாதார ரீதியில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலோ நான் உதவி கேட்காமலேயே விஜய் ஓடிவந்து உதவி செய்வார்.  ஆனால் நாங்கள் யாரும் எப்போதும் தொழில்ரீதியான உதவியை யாரிடமும் எப்போதும் கேட்டுக்கொள்ள மாட்டோம் என்று கூறினார்.  மேலும் அவர் இளைய தளபதியில் இருந்து, தளபதியாக மாறிய காரணம் இதுவரை எனக்கு தெரியவில்லை” என்றும் கூறியுள்ளார்.

ALSO READ | உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.