Share on Social Media


பாலமேடு : பாலமேடு சாத்தையாறு அணை தொடர் மழையால்ஜன., 6 முதல் மறுகால் செல்கிறது.

இந்த அணையை பாசனத்திற்காக அமைச்சர் உதயகுமார், கலெக்டர் அன்பழகன், எம்.எல்.ஏ., மாணிக்கம் திறந்து வைத்தனர். நேற்றிலிருந்து 25 கனஅடி வீதம் 20 நாட்களுக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்விற்கு 11 கண்மாய் பாசன விவசாயிகளுக்கு பொதுப்பணித் துறை தகவல் தெரிவிக்கவில்லை என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.விவசாயி ரமேஷன் கூறுகையில், ”அணைக்கான வரத்து கால்வாயை துார்வாரி 45 நாட்கள் காவல் காத்து நீரை கொண்டு வந்தோம்.

தற்போது சமூக ஆர்வலர்கள் உதவியால் இயந்திரம் மூலம் பாசன ஓடைகளை சுத்தம் செய்து 7 கண்மாய்களுக்கு நீர் செல்ல வழிவகை செய்துள்ளோம். வரத்து மற்றும் பாசன ஓடைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன,” என்றார்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *