Share on Social Media


திருப்பூர் : திருப்பூர் மாவட்ட எல்லையாக உள்ள சாமளாபுரம் பகுதியில் பெரிய அள விலான குளம் உள்ளது.நொய்யல் ஆற்றில் செந்தேவிபாளையம் அணைக்கட்டு வழியாக இக்குளத்துக்கு தண்ணீர் வருகிறது.

இக்குளம் நிரம்பிய பின், குளத்தின் வடகிழக்கு மூலையில் உள்ள ராஜவாய்க்கால் மூலம் காளிபாளையம் வழியாக பள்ளபாளையம் குளத்துக்கு தண்ணீர் செல்கிறது.கடந்த இரண்டாண்டாக இந்த இரு குளங்களும் நீர் நிரம்பி காட்சியளித்தது.தற்போது சாமளாபுரம் குளக்கரை மேம்பாடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால் குளத்துக்கு நீர் வருவது தடை செய்யப்பட்டது. இதனால் தற்போது இரு குளங்களும் நீர் இன்றி உள்ளது.இந்நிலையில் பள்ளபாளையம் குளத்தில் ஒரு சிலர் குப்பை கழிவுகளை கொண்டு வந்து கொட்டினர். அதன் தொடர்ச்சியாக தற்போது கட்டட கழிவுகள் லோடு லோடாக கொண்டு வந்து குளத்தில் கொட்டப்பட்டு வருகிறது.

இதனால் குளத்தின் தன்மை மாறுபடும் நிலையும், குளத்தில் நீர் நிரம்புவதும் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. குளம் முற்றிலுமாக கட்டட மற்றும் குப்பை கழிவுகளால் மூடப்படும் முன், பொதுப் பணித்துறை, பேரூராட்சி நிர்வாகம் உரிய கண்காணிப்பு மேற்கொண்டு, பாதுகாக்க வேண்டும்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *