Share on Social Media


திருவள்ளூர்-உடல்நலம் குன்றி, நடக்க முடியாதவர்களுக்கு, நடமாடும் வாகனம் மூலம் வலி தணிப்பு மற்றும் புனர்வாழ்வு சிகிச்சை திட்டத்தை திருவள்ளூரில், அமைச்சர் நாசர் நேற்று துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் ஒன்றிய அலுவலகத்தில் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில், வலி தணிப்பு மற்றும் புனர்வாழ்வு சிகிச்சை திட்டம் துவக்க விழா நேற்று நடந்தது.இத்திட்டம் மூலம், நடமாட முடியாமல் படுக்கையில் உள்ள நோயாளிகளின் வீடுகளுக்கு நடமாடும் வாகனம் மூலம் தேடிச் சென்று, சிகிச்சை அளிப்பதாகும். இத்திட்டத்தை பால்வளத் துறை அமைச்சர் நாசர் துவக்கி வைத்து பேசியதாவது:முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில், உடல்நலம் குன்றியவர்கள், மனநலம் பாதித்த நோயாளிகள் மற்றும், படுக்கைவிட்டு எழுந்திருக்க முடியாதவர்களின் வீடுகளுக்கு நடமாடும் வாகனம் மூலம், மருத்துவர்கள் நேரில் சென்று சிகிச்சை, உதவிகள் அளிக்கப்படும்.

முதற்கட்டமாக, மீஞ்சூர், கடம்பத்துார், பூவிருந்தவல்லி, எல்லாபுரம் மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய ஒன்றியங்களில், ஐந்து வாகனங்கள் விடப்பட்டுள்ளன. இதனால், மாவட்டத்தில், 2,208 பேர் பயனடைவர்.இச்சிகிச்சை பெற கட்டணமில்லா தொலைபேசி 1800 599 7626 என்ற எண்ணுக்கும், 98403 27626 என்ற மொபைல் போனுக்கும், ‘வாட்ஸ் ஆப்’ மூலம் தகவல் அனுப்பினால் விரைந்து மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளிப்பர்.

ஒரு வாகனத்தில், ஒரு மருத்துவர், இரண்டு செவிலியர்கள் இருப்பர்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணசாமி, ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர், மீனா பிரியதர்ஷினி, ஒன்றிய சேர்மன் ஜெயசீலி, துணை இயக்குனர் ஜவஹர்லால் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *