Share on Social Media


ஜெனீவா : உலகளவில் கொரோனா 2வது அலை இந்தியாவில் மோசமாக உள்ள போதிலும் நடப்பு நிதியாண்டின் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.3% ஆக உயரும் என உலக வங்கி கணித்துள்ளது. உலகளாவிய பொருளாதார நிலை குறித்த கணிப்புகளை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில் கடந்த நிதி ஆண்டில் 2வது [பாதியில் இந்திய பொருளாதாரம் மீண்டு எழுவதற்கான அறிகுறிகள் காணப்பட்டதாகவும் ஆனால் கொரோனா 2வது அலையால் அது தடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.

உலகளவில் இந்தியாவில் தான் கொரோனா 2வது அலை மோசமாக உள்ளதாகவும் எனினும் நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் 8.3% வளர்ச்சியை பெறும் என்றும் எதிர்பார்ப்பதாக கூறப்பட்டுள்ளது.
2022 -2023 நிதி ஆண்டில் 7.5% பொருளாதார வளர்ச்சியும் 2023-2024 நிதி ஆண்டில் 6.5% பொருளாதார வளர்ச்சியும் எட்ட வாய்ப்பு உள்ளதாக உலக வங்கி கணித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ஒட்டுமொத்த உலக பொருளாதார வளர்ச்சி 5.6%ஆக இருக்கும் என்றும் உலக வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *