Share on Social Media

சேலம்: நாடு முழுவதும் நேற்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலையேற்றப்பட்டது.   எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கின்றது. இந்த வகையில் இம்மாத தொடக்கத்தில் இருந்து பெட்ேரால், டீசல் விலையை உயர்த்தி வருகிறது.  நாடு முழுவதும் நேற்றைய தினம் பெட்ரோல் 20 முதல் 22 காசும், டீசல் 28 காசும் உயர்த்தப்பட்டது. இதன்மூலம் சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 95.06க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று 22 காசு உயர்ந்து ₹95.28 ஆக அதிகரித்தது. டீசல் 89.11ல் இருந்து 28 காசு உயர்ந்து 89.39 ஆக அதிகரித்தது. இதுவே சேலத்தில் பெட்ரோல் ஒரு லிட்டர் 95.49ல் இருந்து 21 காசு உயர்ந்து 95.70 ஆகவும், டீசல் 89.55ல் இருந்து 28 காசு உயர்ந்த 89.83 ஆகவும் விற்கப்பட்டது.

மாநிலத்தின் பெரும்பாலான நகரங்களில் நேற்றைய தினம் பெட்ரோல் விலை 96ஐ எட்டியது. டீசல் விலை 91ஐ நெருங்கியது. நடப்பு மாதத்தில் மட்டும் இதுவரை பெட்ரோல், டீசல் விலை 14 நாட்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்தமாக பெட்ரோல் விலை 2.85, டீசல் விலை 3.67 அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் மிக அதிகபட்சமாக நடப்பு மாதம் விலையை ஏற்றியுள்ளனர்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *