Share on Social Media


மாவட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி, ஒட்டன்சத்திரம், பழநி, கொடைக்கானல் நகராட்சிகள், 23 பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ளது.

கடந்த 2016 ல் மாநகராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வேட்பு மனுவும் தாக்கல் செய்தனர்.இட ஒதுக்கீடு அடிப்படையில் எஸ்.சி., (பெண்) 29,43, பெண்கள் (பொது) 3,5,6, 9,11,13,15,19, 20, 23, 24, 27, 30, 31, 36,37, 38,40,41,42,45,45 என மொத்தம் 24 வார்டுகள் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டன.அந்த இடங்களில் ஏற்கனவே அங்கு கவுன்சிலராக இருந்தவர்கள் தங்கள் மனைவி, பெண் உறவினர்களை வேட்பு மனுத் தாக்கல் செய்ய வைத்தனர். திடீரென தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

தற்போது ஆட்சி மாறியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு எந்நேரமும் வரலாம் என்ற நிலை உள்ளது. கட்சிகள் சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன.போட்டா போட்டிஏற்கனவே கடந்த முறை சீட் பெற்றவர்கள் வரும் தேர்தலிலும் கட்டாயம் சீட் ஒதுக்க வேண்டும் என முட்டி மோதி வருகின்றனர். அதே சமயம் சீட் கிடைக்காதவர்கள் சுயேட்சையாகவும் களமிறங்கி தங்கள் செல்வாக்கை தக்க வைக்க திட்டமிட்டு வருகின்றனர். தற்போது வரை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக மேலும் சில மாநகராட்சிகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால் இட ஒதுக்கீடு மாற்றப்படலாம். தேர்தல் அறிவிப்பு வந்தால் தெரியும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *