Share on Social Media


த்ரிஷியம் 2 வந்தாச்சு பாபநாசம் 2 எப்போ? – ஜீத்து ஜோசப் பேட்டி

28 பிப், 2021 – 14:35 IST

எழுத்தின் அளவு:


When-papanasam-2-will-happend-?---Jeethu-joseph-Interview

மலையாளத்தில் 2014ல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, வசூலை வாரிக்குவித்து, சீன மொழி உட்பட 6 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது த்ரிஷியம். மோகன்லால், மீனா நடித்திருந்தனர். தமிழில் கமல், கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் வெளியானது.

ஆறாண்டுகளுக்கு பிறகு த்ரிஷியம் 2 உருவாகி கடந்த வாரம் அமேசான் பிரைம் ஓ.டி.டி., தளத்தில் வெளியாகி உள்ளது. உலகில் 225 நாடுகளில் உள்ள மலையாளிகள் இந்த திரைப்படத்தை ஒரே நேரத்தில் பார்த்துள்ளனர். முதல் படத்தை விட அதன் இரண்டாம் பாகம் இன்னும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு வாரத்தில் அதிகமான தமிழ் ரசிகர்களும் த்ரிஷியம் 2 பார்த்துள்ளனர். இரண்டாம் பாகமும் அதற்குள் தெலுங்கில் தயாராக பணிகள் துவங்கி விட்டன.இப்படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் அளித்த பேட்டி…

* த்ரிஷியம் படம் தயாராகும் போதே 2ம் பாகம் உருவாக்கும் என்ற எண்ணம் இருந்ததா
நிச்சயமாக இல்லை. அதோடு கதை நிறைவு பெற்றுவிட்டதாகவே நினைத்திருந்தேன். ஆனால் 2ம் பாகம் தயார் செய்ய கதையில் வாய்ப்புள்ளதா என தயாரிப்பாளர் ஆன்டனி பெரும்பாவூர் கேட்டுக் கொண்டார். அதற்குள் சமூக ஊடகங்களில் எல்லாம் 2ம் பாக கதை இது தான் என்று வெளியிட்டுக் கொண்டிருந்தனர். சரி, நாமே சிந்திப்போம் என்று கதையை உருவாக்க துவங்கினேன். ஆறாண்டுகள் பல மாற்றங்களுடன் கதை மனதில் ஓடியது. கடைசியில் கொரோனா காலத்தில் ஒரே மாத்தில் ஸ்கிரிப்ட் எழுதி, படப்பிடிப்பும் முடித்து விட்டேன்.

*ஜோர்ஜ் குட்டி (மோகன்லால்) போலீஸ் ஸ்டேஷனில் நிற்பதை பார்த்த ஒரு சாட்சியை 2ம் பாகத்தில் உருவாக்கியிருக்கிறீர்கள். முதல் பாகம் எழுதும் போது அப்படி ஒரு கற்பனை இருந்ததா?

இல்லை. இரண்டாம் பாகம் துவங்க இந்த கற்பனை தான் காரணமாயிற்று.

1614503308 Tamil News Spot

* மெகா த்ரில்லர் ஆக படம் வந்துள்ளது. க்ரைம், அதை சார்ந்த விஷயங்கள் எல்லாம் நீங்களாகவே சிந்தித்து எழுதுகிறீர்களா?
நண்பர்களான தடவியல் நிபுணர்கள், போலீஸ் அதிகாரிகளிடம் டெக்னிக்கல் விஷயங்களை கேட்டு, முடிந்த அளவு படத்தில் லாஜிக் இருக்கும் படி தான் எழுதுகிறேன்.படத்தில் லாஜிக் இருக்கிறதா என மோகன்லால் பார்ப்பார். அவரே இந்த படப்பிடிப்பில் ஒருமுறை தமாஷாக ஜித்து கிரிமினல் எண்ணம் உள்ளவர் என்றார். யதார்த்தமான கிரிமினல் நடைமுறைகளை தான் படத்தில் காண்பிக்கிறேன்.

* திரைக்கதையில் திகில் ஏற்படுத்தி பார்வையாளர்களை பரவசமாக்குகிறீர்கள். இப்படி எழுத வித்தியாசமான சூழல் எதையாவது உருவாக்குவீர்களா?
சிலருக்கு மது அருந்தினால், சிகரெட் புகைத்தால் மளமளவென எழுத்து வரும். எனக்கோ மிகவும் விருப்பமான உணவு வேண்டும். அவற்றை சாப்பிட்டு ஜாலியாக இருந்து த்ரில்லாக எழுதுவேன்.

* தமிழில் பாபநாசம், தம்பிக்கு பிறகு படங்கள் இயக்கவில்லையே..

விருப்பம் உள்ளது. வாய்ப்பு வரட்டும். மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் ராம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் வெளியாகும். அது ஒரு மாஸ் படமாக இருக்கும்.

1614503314 Tamil News Spot

* பாபநாசம் 2 எப்போது?
அதற்கு கமல்ஹாசன் மனது வைக்க வேண்டும். கமல் ரெடி என்றால் நான் ரெடி.

* அவர் அரசியலில் ஆர்வமாக இருக்கிறாரே…
தேர்தலுக்கு பிறகும் ஆரம்பிக்கலாமே

* ஹீரோயினாக கவுதமி மீண்டும் வருவாரா?
அதுப்பற்றி சொல்ல விரும்பவில்லை

* த்ரிஷியம் 2 கிளைமாக்ஸில் 3ம் பாகத்திற்கான வாய்ப்பாக சில வசனங்கள் உள்ளதே. த்ரிஷியம் 3 உண்டா?
அதற்குள் 3ம் பாகம் வருகிறது; கதை இது தான் என சமூக ஊடகங்களில் ஊகங்கள் வருகின்றன. 3ம் பாகம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் அதற்கான கிளைமாக்ஸ் என் மனதில் ரகசியமாக உள்ளது.

* த்ரிஷயம் 2 போன்று பாபநாசம் 2ம் வந்தால் வரவேற்கப்படுமா?
நிச்சயமாக. முதல் பாகத்தை விட த்ரிஷியம் 2 சிறப்பாக உள்ளது என்றே மலையாள ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *