Share on Social Media


விஜய்யின் ஷூட்டிங் அங்கே நடப்பது தோனிக்கோ, தோனி அங்கே வந்திருப்பது விஜய்க்கோ தெரியாது. தோனியின் மேனேஜரிடம் விஜய்யின் ‘பீஸ்ட்’ பட ஷூட்டிங் இங்கேதான் நடக்கிறது என்கிற தகவலை ‘பீஸ்ட்’ படக்குழுவில் இருந்தவர் தெரிவித்திருக்கிறார். விஜய்க்கும் தோனியின் ஷூட்டிங் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. அப்போது விஜய், “தோனியை மீட் பண்ணமுடியுமா… அவரை நேர்ல பார்த்து 13 வருஷம் ஆகிடுச்சு” என்று சொல்லியிருக்கிறார். இது அப்படியே தோனிக்கு சொல்லப்பட, “நான் பீஸ்ட் ஸ்பாட்டுக்குப் போறேன்” எனக் கிளம்பி வந்திருக்கிறார் தல தோனி.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *