Share on Social Media


கோவை:கோவையை சேர்ந்த தொழில் துறையினருடன் கலந்துரையாடிய, மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், தொழில்வளர்ச்சிக்கு உறுதி அளித்ததாலும், தொழில் துறையினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கோவையில் தொழில் துறையினருக்கு உள்ள பிரச்னைகள், தேவைப்படும் வசதிகள், நகருக்கு தேவையான வசதிகள், உடனடி தீர்வுகள் குறித்து அறிய சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சி, ‘கொடிசியா’ வளாகத்தில் நடந்தது. ‘கொடிசியா’ தலைவர் ரமேஷ்பாபு வரவேற்றார். ‘சீமா’ தலைவர் கார்த்திக் உள்ளிட்ட 50 தொழில் அமைப்புகளை சேர்ந்த, 140 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில்,”நீங்கள் கூறிய பிரச்னைகளை அறிக்கையாக தயாரித்து ஓரிரு நாட்களில் முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்வேன். உடனடியாக தீர்க்கும் பிரச்னைகளை தீர்த்து விடலாம். ”நீண்ட கால அடிப்படையில், ஓராண்டில் இருந்து, ஐந்து ஆண்டுகள் வரை புதிய திட்டங்களை செயல்படுத்தலாம். ”பிரச்னைகளை வகைப்படுத்தி, வரிசைப்படுத்தி செய்யலாம்.
கட்டமைப்பு வசதிகள் விரைந்து முடிக்கப்படும். மூன்று மாதத்துக்கு ஒரு முறை தொழில் துறையினருடன் இதுபோன்ற சந்திப்புகள் இருக்கும். அப்போது, அதிகாரிகளையும் அழைத்து வந்து பேசலாம்,” என்றார்.
நிகழ்ச்சியில் பாகுபாடு இல்லாமல், அனைத்து துறையினரையும் அழைத்து பேசியதால், தொழில் துறையினர் ஆச்சரியமும் உற்சாகமும் அடைந்துள்ளனர். தங்களது பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *