Share on Social Media


Parliament of India

மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் மூன்று புதிய வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

AP20352473683597 Tamil News Spot
Delhi farmer protest

`இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகவுள்ளன. எனவே இவற்றை வாபஸ் வாங்க வேண்டும்’ என வலியுறுத்தி கடந்த 26-ம் தேதி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

AP20353440977777 Tamil News Spot
Delhi farmer protest

அன்றிலிருந்து தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள், 28-வது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

AP20357377482379 Tamil News Spot
Press meet regarding Delhi farmer protest

மத்திய அரசு 5 கட்டங்களாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அது தோல்வியில் முடிய, ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை கடைசி நேரத்தில் ரத்தாகிவிட்டது. இந்நிலையில் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசும், விவசாயிகளும் தயாராகி வருகின்றனர்.

AP20356406833880 Tamil News Spot
Delhi farmer protest

`சட்டங்களை ரத்து செய்துவிட்டு வாருங்கள். பிறகு பேசலாம்’ என்று உறுதியுடன் டெல்லி எல்லைகளில் காத்திருக்கிறார்கள், விவசாயிகள்.

AP20353440977777 Tamil News Spot
Delhi farmer protest

தேசிய விவசாயிகள் தினமான இன்று, டெல்லியில் விவசாயிகள் மதிய உணவைக் கைவிட்டு போராட்டம் நடத்துகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பே உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கியிருக்கின்றனர்.

WhatsApp Image 2020 12 21 at 11 31 26 AM 1 Tamil News Spot
Delhi farmer protest

அங்கு போராட்டக் களத்தில் இதுவரை 35 விவசாயிகள் இறந்திருக்கிறார்கள்.

EjPBfeDUYAEb9J8 Tamil News Spot
Priyanka gandhi and Rahul gandhi

இந்நிலையில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிடக்கோரி, காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் பல்வேறு நபர்களிடம் சுமார் 2 கோடி கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதனை ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் நாளை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்தித்து அவரிடம் வழங்க இருக்கிறார்கள்.

AP20344518003562 Tamil News Spot
Farmers protest at Delhi-Uttar Pradesh state border

குடியரசுத் தலைவர் மாளிகை அருகே இருக்கும் விஜய் சவுக் பகுதியிலிருந்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் பேரணியாகச் சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்திக்க உள்ளனர்.

AP20356408101917 Tamil News Spot
Delhi farmer protest

ஹரியானா விவசாயிகள் 26, 27, 28 ஆகிய தேதிகளில் அனைத்து சுங்கச்சாவடிகளையும் முடக்கி வரி வசூலிப்பதை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *