Share on Social Media


“சீனா தைவானைத் தாக்கினால், நாங்கள் பாதுகாப்பு அரணாக நிற்போம்” என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடி காட்டியிருக்கிறார். அதேசமயம், “தைவான் சீனாவின் பிரிக்கமுடியாத அங்கம், சீனா அதில் சமரசம் செய்துகொள்ளாது” என சீன தரப்பில் பதிலடியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பதற்றம் நிலவுகிறது. இந்த மோதல் குறித்து உலகநாடுகள் அச்சம் தெரிவித்து வருகின்றன.

தைவான் – சீனா

தைவான் – சீனா மோதல் பின்னணி:

சீனா – தைவான் இடையேயான பிரச்னை என்பது, அரை நூற்றாண்டுகளுக்கு முன்பே, தைவான் தனிநாடாக உருவெடுத்தது முதலே தொடங்கிவிட்டது. 1949-ம் ஆண்டு சீனாவில் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பின்னர், சீனாவின் பிடியில் இருந்த தைவான் தனியாகப் பிரிந்து, ஒரு தனி நாடாக உருவெடுத்தது. பெரும்பாலான உலக நாடுகளின் அங்கீகாரம் இல்லாத போதிலும், தனக்கென ஒரு நிலப்பரப்பு, மக்கள், அரசாங்கம், அரசியல் சட்டம், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், 3 லட்சம் வீரர்களைக் கொண்ட ராணுவம் என தன்னாட்சி அதிகாரத்துடன் இன்றுவரை இயங்கி வருகிறது. தைவான் தன்னை தன்னாட்சி பெற்ற தனிநாடு என்கிறது, சீனாவோ தைவானில் அமைந்திருக்கும் அரசு, சட்டவிரோதமானது, தைவான் சீனாவிலிருந்து பிரிந்த ஒரு மாகாணப்பகுதி என்கிறது.

Also Read: தை‘வானில்’ பறந்த சீனப் போர் விமானங்கள்! – அதிகரிக்கும் போர்ப் பதற்றம்…

அழைப்பும் மிரட்டலும்:

பிரிந்த தைவானை மீண்டும் தன்னுடன் இணைத்துவிட வேண்டும் என்ற நோக்கில் சீனா பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தது. குறிப்பாக, 1981-ம் ஆண்டு சீனா, `ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்’ என்ற புதிய ஆட்சிமுறை திட்டத்தைக் கொண்டுவந்து, தைவானைத் தன்னுடன் இணையுமாறு அழைத்தது. ஆனால் தைவான் அதை அடியோடு நிராகரித்தது. 2005-ம் ஆண்டு `பிரிவினைவாத தடுப்புச்சட்டத்தை’ இயற்றி தைவானை கட்டுப்படுத்த முயன்றது. அதற்கும் தைவான் பிடிகொடுக்க மறுத்தது.

தொடர்ந்து, தைவான் கடற்பரப்பில் சீனா தனது போர்க்கப்பல்களை நிலைநிறுத்தி பதற்றத்தை ஏற்படுத்தி ராணுவ ரீதியில் தைவானை அச்சுறுத்தி வந்தது.

vikatan 2019 05 b1a08dcf 140a 4f92 bee1 2e538b85e601 134337 thumb Tamil News Spot
தைவான்

தைவான் – அமெரிக்கா நட்புறவு:

அந்த நிலையில், 2016-ம் ஆண்டு தைவான் அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட சாய் இங்-வென், சீனாவிலிருந்து தைவானை பாதுகாத்துக்கொள்வதற்காக அமெரிக்காவுடன் நட்புறவை ஏற்படுத்திக்கொண்டார். அப்போதைய, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவியேற்றதுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், அமெரிக்காவிடமிருந்து தைவான் தற்காப்பு ஆயுதங்களை வாங்கிக்கொள்ளவும் வழிவகுத்தார். தொடர்ந்து 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் தைவான் அதிபராக சாய் இங்-வென் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக்கொண்டார். அதேபோல் புதிய அமெரிக்க அதிபராக ஜோ பைடனுடன் பதவியேற்றுக்கொண்டார். அமெரிக்கா – தைவான் இடையேயான உறவு மேலும் வலுப்பெறத்தொடங்கியது.

map of taiwan Tamil News Spot
தைவான்

சீனாவின் பகையுணர்வு:

தனது பரம எதிரியான அமெரிக்காவுடன் தைவான் கைகோத்துக்கொண்டது, சீனாவின் ஆத்திரத்தை மேலும் அதிகரித்தது. சீனா, தைவான் வான் பரப்பில் தனது 100-க்கும் மேற்பட்ட போர் விமானங்களை பறக்கவிட்டு அச்சுறுத்தியது. “தைவான் பகுதியில் அந்நிய நாடுகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், அதற்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என மறைமுகமாக சீனா, தைவானுக்கு எச்சரிக்கை விடுத்தது. தேவைப்பட்டால் தைவான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டோம் என பகிரங்கமாக மிரட்டியது.

Also Read: `அமெரிக்கா.. இந்தியா.. தைவான்.. ஹாங்காங்!’ – போருக்குத் தயாராகச் சொல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங்

தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சர் சியு குவோ-செங், “ கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவுடனான உறவில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது, சீனா 2025-ம் ஆண்டுக்குள் தைவான்மீது போர்த்தொடுக்கும் நிலை உருவாகியிருக்கிறது” என பதற்றமான சூழலை வெளிப்படுத்தினார்.

1580808776 5e393a4879452 Tamil News Spot
சீன அதிபர் ஜி ஜின்பிங்

இதைத்தொடர்ந்து பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங் “தைவான் அமைதியான முறையில் சீனாவுடன் இணைக்கப்படும். தைவான் அரசின் தனிநாட்டுப் பிரிவினைவாதம்தான், தாய்நாடான சீனாவுடன் மீண்டும் தைவானை ஒன்றிணைப்பதற்கு தடையாக இருக்கிறது. சீன அரசாங்கம் தனது தாய்நாட்டை முழுமையாக ஒன்றிணைக்கும் வரலாற்றுப்பணியை நிச்சயமாக நிறைவேற்றும்!” என மீண்டும் பதற்றத்தைத் தூண்டினார்.

WhatsApp Image 2020 04 14 at 9 21 59 PM Tamil News Spot
சாய் இங்-வென்

அதேசமயம் தைவான் பிரதமர் சாய் இங்-வென், “ தைவான் சீனாவுடன் இணைக்கப்படும் என்ற சீனாவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் நாங்கள் அடிப்பணியமாட்டோம்!” என அதற்கு பதிலடி கொடுத்தார்.

Also Read: தைவான்: உலகத்தின் மிக அபாயகரமான பகுதி… நாடுகளின் கதை – 6

தைவானுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா:

இந்த நிலையில், “தைவானுடனான எங்கள் உறவில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் பொறுப்புடன் இருக்கிறோம். சீனா தைவானைத் தாக்கினால் நாங்கள் நிச்சயம் தைவானைப் பாதுகாப்போம்!” என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

AP21238782039518 Tamil News Spot
ஜோ பைடன்

Also Read: சீனாவுக்கு அடிபணியாத தைவான்; தீர்க்கப்படாத பிரச்னையின் காரணம் என்ன? – முழு அலசல்

சீனாவின் எதிர்வினை:

சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர், “சீனாவின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு போன்ற முக்கிய நலன்களுக்கு பிரச்னை ஏற்பட்டால் சீனா ஒருபோதும் சமரசம் செய்யதுகொள்ளாது. நாட்டுநலனை பாதுகாக்க சீன மக்களின் வலுவான உறுதிப்பாட்டை, வலிமையான திறனை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்! தைவான் சீனாவின் பிரிக்கமுடியாத அங்கம். சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் அந்நிய நாடுகள் தலையிட அவசியமில்லை!” என அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பேச்சுக்கு எதிர்வினையாற்றியிருக்கிறார்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *