Share on Social Media

“இதற்குமுன் பலரும் இந்த நிறுவனத்தைக் கேட்டபோது தராமல், பார்ம்ஈஸி நிறுவனத்திடம் தந்தது ஏன்?”

“இதற்கு முன்பு கேட்டவர்கள் எல்லாம் ஃபைனான்ஷியல் இன்வெஸ்டர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களின் நோக்கம், கொஞ்சம் லாபம். அவர்களின் கையில் என் நிறுவனம் சென்றால், உன்னத நிலையை எட்டாது என எனக்குத் தோன்றியது. ஆனால், பார்ம்ஈஸி நிறுவனத்தை நடத்துபவர்களுக்குத் தெளிவான நோக்கம் இருப்பது தெரிந்தது. பல ஆயிரம் கோடி ரூபாயை இதில் முதலீடு செய்திருக்கிறார்கள். பல நிறுவனங்கள் இருந்தாலும் அவர்களுக்கு இந்த நிறுவனம்தான் பிடித்திருந்தது. இவர்களைப்போல, வேறு யாரும் கிடைப்பார்களா என்கிற கேள்வியும் எனக்கிருந்தது. எனவேதான், பார்ம்ஈஸி நிறுவனத்துக்கு தைரோகேர் நிறுவனத்தை விற்றேன்.’’

வேலுமணி மனைவி மற்றும் மகன், மகளுடன்....

வேலுமணி மனைவி மற்றும் மகன், மகளுடன்….

“நீங்கள் வளர்த்த நிறுவனத்தை உங்கள் வாரிசுகள் ஏற்று நடத்த விரும்பவில்லையா?”

“என் குழந்தைகளைப் போல அழகோ, அறிவோ உலகில் வேறு எந்தக் குழந்தைகளுக்கும் இல்லை என்று ஒவ்வொரு தந்தையும் நினைப்பான். இது நூற்றுக்கு 99% தவறு. நம் நாட்டில் பல குடும்பங்களில் ஒரு நிறுவனத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் விதத்தை ஆராய்ந்து பார்த்திருக்கிறேன். இப்படிச் செல்வதில் ஒரே ஒரு சதவிகிதத்தினர்தான் அப்பா வளர்த்த நிறுவனத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கின்றனர். மற்றவர்கள் அதே நிலையில்தான் நிறுவனத்தை வைத்திருக்கின்றனர். அல்லது நிறுவனத்தைத் தொலைத்து விடுகிறார்கள். யாரோ ஒருவர் என் நிறுவனத்தில் முதலீடு செய்து, லாபம் பார்ப்பதற்காக கஷ்டப்பட்டு உழைப்பார். ஆனால், சாப்பாட்டுக்கு எந்த கஷ்டமும் இல்லாத குழந்தைகள் ஒரு நிறுவனத்தை முன்பின் தெரியாத யாரோ ஒருவர் கொண்டுசெல்ல நினைக்கும் அளவுக்குக் கொண்டு செல்வார்களா என்கிற கேள்வி எனக்குள் இருந்தது. இதைப் பற்றி என் குழந்தைகளிடமே பேசினேன்.

`அப்பா, நீங்கள் நினைப்பதுதான் சரி. நாங்கள் எப்படியாவது பிழைத்துக்கொள்வோம். நாங்களே ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, அதில் ஜெயிப்பதுதான் எங்களுக்குப் பெருமையே தவிர, உங்கள் வெற்றியால் நாங்கள் வெற்றி பெற விரும்பவில்லை’ என்றார்கள்.

இதைச் சொல்ல என் மகனுக்கும் மகளுக்கும் ஒரு பக்குவம் வேண்டும். அது அவர்களிடம் இருப்பதில் எனக்கு சந்தோஷம்.’’

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *