Share on Social Media


கள்ளக்குறிச்சி-வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கட்டாயமாக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அதிகளவிலான நவீன அரிசி மற்றும் சர்க்கரை ஆலைகள் இங்குள்ளன. கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணையும், கள்ளக்குறிச்சி அருகே உள்ள மணிமுக்தா அணையும் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளன.இதுதவிர, கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் தென்பெண்ணையாறு கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலுார்பேட்டை வழியாக கடலுார் சென்று கடலில் கலக்கிறது.இந்த ஆற்றில் இருந்து செயல்படுத்தப்படும் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம், ரிஷிவந்தியம், தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயனடைகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை மட்டுமே கை கொடுக்கிறது. தென்மேற்கு பருவமழை குறைவாக இருக்கும். காலநிலை மாற்றத்தால், சில ஆண்டுகளாக குறைந்தளவு மழை மட்டுமே பெய்தது.இதனால், கோடைகாலம் துவங்கும் முன்பே கோமுகி, மணிமுக்தா அணைகள் உட்பட அனைத்து நீர் நிலைகளும் வறண்டன. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது.அரசியல் பிரமுகர்கள் கிராமங்களில் டேங்க்கர் லாரி மூலம் மக்களுக்கு குடிநீர் வழங்கினர். விவசாய கிணறுகளில் தண்ணீர் இல்லாததால் விளைநில பயிர்கள் கருகி, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால், விவசாயிகள் வெளிமாநிலங்களுக்கு கூலி வேலைக்குச் சென்றனர்

.இந்நிலையில், மாவட்டத்தில் கடந்த 2020ம் ஆண்டு வடகிழக்குப் பருவமழை 20 செ.மீ.,க்கும் அதிகமான பெய்துள்ளது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலையில் இதுவரை 7 செ.மீ.,க்கும் அதிகமான பெய்துள்ளது. மாவட்டத்தில், போதுமான அளவில் பெய்து வரும் நிலையில், மழைநீரை முறையாக சேமிக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், விவசாய கிணறு உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.இதற்கு, மழைநீர் சேமிப்பு திட்டத்தை முறையாக செயல்படாததாலும், இது குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதுதான் முக்கிய காரணமாக உள்ளது.முன்னாள் முதல்வர் ஜெயலலலிதா அறிமுகப்படுத்திய மழைநீர் சேகரிப்புத் திட்டம், நல்ல பலனைக் கொடுத்தது. இத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டதால், அரசு அலுவலகம் உட்பட அனைத்து குடியிருப்புகளிலும் மழைநீர் சேமிப்புக்கான கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டது.

நாளடைவில் முறையாக பின்பற்றாததாலும், ஆட்சி மாற்றத்தினாலும் இத்திட்டம் பொலிவிழந்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் பெய்யும் மழைநீர் ஆறு, ஏரி, கழிவுநீர் கால்வாய்களில் கலந்து வீணாகிறது.வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், இந்த திட்டத்தை கட்டாயமாக்கி மக்களை பின்பற்ற வைக்கவும், கிராமங்களில் துார்ந்துபோன ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை ஆய்வு செய்து துார்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *