Share on Social Media


‘தேள்’ வெளியீடு தள்ளி வைப்பு

07 டிச, 2021 – 10:21 IST

எழுத்தின் அளவு:


‘தூத்துக்குடி, மதுரை சம்பவம், போடி நாயக்கனூர் கணேசன்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர் டான்ஸ் மாஸ்டர் ஹரிகுமார். அவர் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘தேள்’. இப்படத்தில் பிரபுதேவாக கதாநாயகனாக நடிக்க, சம்யுக்தா கதாநாயகியாக நடித்துள்ளார். ஈஸ்வரி ராவ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் இந்த வாரம் டிசம்பர் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர். “தவிர்க்க முடியாத சில சூழ்நிலைகளால் ‘தேள்’ படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்,” என தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் ‘ஜெயில், ஆன்டி இண்டியன், முருங்கைக்காய் சிப்ஸ், க், 3.33” ஆகிய படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *