Share on Social Media


நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலுக்கு தயாராகி விட்டது கோவை மாநகராட்சி. வேட்பாளர்களிடம் அரசியல் கட்சிகள் மனுக்கள் பெற்று வரும் நிலையில், 15 லட்சத்து 38 ஆயிரத்து 411 பேர் கொண்ட வாக்காளர் பட்டியலை, கமிஷனர் ராஜகோபால் நேற்று வெளியிட்டார்.தமிழகத்தில் நகர்ப்புறங்களில் தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

ஓட்டுச்சாவடிகள் இறுதி செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு பட்டியல் வழங்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை நேற்று வெளியிட்டார். ஆண்களை காட்டிலும் பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.இந்த வாக்காளர் பட்டியல் மாநகராட்சி பிரதான அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில், பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி கமிஷனர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:கோவை மாநகராட்சியின், 100 வார்டுகளில், 1,290 வாக்குச்சாவடிகளும், 287 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்படுகின்றன. இங்கு, 7 லட்சத்து, 69 ஆயிரத்து, 397 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து, 68 ஆயிரத்து, 736 பெண் வாக்காளர்களும், 278 மூன்றாம் பாலினத்தவர் என, 15 லட்சத்து, 38 ஆயிரத்து, 411 வாக்காளர்கள் உள்ளனர்.தேர்தல் பணிகளுக்கு, 20 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேவை. 1,548 ‘கன்ட்ரோல் யூனிட்’கள் மற்றும், 3,096 ‘பேலட் யூனிட்’கள் தேவைப்படுகின்றன.

இந்த இயந்திரங்களில் முதற்கட்ட சோதனை, ஒரு மாதத்துக்கு முன்பே முடிந்து விட்டது. மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா, உதவி கமிஷனர்(வருவாய்) செந்தில்குமார் ரத்தினம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நகராட்சி, பேரூராட்சிவாக்காளர்கள் நிலவரம்
கோவை மாவட்டத்தில் உள்ள, 7 நகராட்சிகளில், 231 ஓட்டுச்சாவடிகள், 96 ஆயிரத்து 980 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 108 பெண் வாக்காளர்கள் மூன்றாம் பாலினத்தவர் 43 பேர் என மொத்தம், 2 லட்சத்து 131 பேர் உள்ளனர். 33 பேரூராட்சிகளில் 632 ஓட்டுச்சாவடிகள், 4 லட்சத்து 73 ஆயிரத்து 207 பேர் உள்ளனர். - நமது நிருபர் குழு-



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *