Share on Social Media


மும்பை: மும்பையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது தேசிய கீதத்தை பாடிய மேற்குவங்க முதல்வர் மம்தா, அதனை அமர்ந்துக்கொண்டு பாடியதுடன் முழுமையாக பாடாமல் அவமதித்ததாக பா.ஜ.,வினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேற்குவங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, 2024ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க முயற்சித்து வருகிறார். இதனால், பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்த வகையில் மஹாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கு 3 நாள் பயணமாக சென்ற மம்தா, தேசியவாத காங்., தலைவர் சரத்பவாரை நேற்று (டிச.,01) சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். முடிவில், அவர் தேசிய கீதத்தை பாடினார்.

முதலில் கீழே அமர்ந்து தேசிய கீதம் பாடிய மம்தா, பாதியில் எழுந்து நின்றதுடன், முழுமையாக பாடாமல் அவசரமாக முடித்து விடுகிறார். தேசிய கீதத்தை அவமதித்ததாக மம்தாவை பா.ஜ.,வினர் கடுமையாக சாடி வருகின்றனர். மேற்குவங்க பா.ஜ., தலைவர் சுகந்தா மஜூம்தார் கூறுகையில், ‘மேற்குவங்க முதல்வர் மம்தா, அரசியல் சாசனப் பதவியில் அமர்ந்துக்கொண்டு, மும்பையில் நடந்த கூட்டத்தில் தேசிய கீதத்தை அவமதிக்கிறார். அவருக்கு சரியான தேசிய கீத நெறிமுறை தெரியாதா அல்லது தெரிந்தே அவமதிக்கிறாரா?,’ எனக் கூறியுள்ளார். மம்தா தேசிய கீதத்தை அவமதித்ததாக பலரும் கண்டன கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *