Share on Social Media

மேலும், “நாட்டின் வளர்ச்சிக்கு அரசாங்கம் மட்டுமே அனைத்தையும் செய்ய முடியாது. தொழில்துறையினரும் முன்வரவேண்டும். மேலும் அதிக பணம் சிலரிடம் மட்டுமே இருக்க கூடாது. தேவைப்படுபவர்களுக்கு பணம் சென்றடைய வேண்டும்.

மேலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க போதுமான அளவுக்கு தொழில்துறையினர் முதலீடு செய்யவில்லை. சில ஸ்டார்ட் அப்களில் உங்களின் முதலீடு திரும்பகிடைக்கவில்லை என்றால் நாட்டுக்காக தியாகம் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதற்கு ஒரு நாள் முன்னதாக இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என இந்திய தொழிலக கூட்டமைப்பில் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்த நிலையில் அடுத்த நாள் சர்ச்சைக்குரிய இந்த கருத்தினை தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்த செய்தி வெளியானவுடன் சமூக வலைதளங்களில் பெரும் சலசலப்பு நிலவியது. எதிர்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

“குருட்டு நம்பிக்கைக்கும் தேசபக்திக்கும் வித்தியாசம் தெரியாமல் பா.ஜ.க அமைச்சர்கள் உள்ளனர்” காங்கிரஸ் தலைவர் ஜெய்வீர் ஷெர்கில் தன்னுடைய ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

பிரியங்கா சதுர்வேதி

பிரியங்கா சதுர்வேதி
Photo: Twitter/
@priyankac19

சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி கூறும்போது, “அமைச்சரின் இந்தப் பேச்சு வெட்கக்கேடானது. இதற்கு அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என சிஐஐ வலியுறுத்த வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்தக் கருத்தரங்கில் டாடா குழுமத்தின் கட்டுமான பிரிவின் தலைவர் பன்மாலி அகர்வாலும் பங்கேற்றார் என்பது கவனிக்கத்தக்கது. இந்த நிலையில், அமைச்சரின் சர்ச்சைகுரிய 19 நிமிட பேச்சு சிஐஐ யூடியூப் தளத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. இதனுடைய திருத்தப்பட்ட வீடியோவும் வெளியிடப்பட்டது. ஆனால் அதுவும் பிறகு நீக்கப்பட்டது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *