Share on Social Media


அண்ணா நகர்-முக்கிய சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அண்ணா நகர் மண்டலம், வில்லிவாக்கம் பஸ் நிலையம், சிட்கோ நகர், வடக்கு மற்றும் தெற்கு ஜெகன்நாதன் நகர், அன்னை சத்யா நகர் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.அதேபோல், அண்ணா நகர் கிழக்கு, முணியப்பா சாலை, பர்னபி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளிலும் மழை நீர் சூழந்துள்ளது.

இந்த பகுதிகளில், சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகள் வாயிலாக, உடனுக்குடன் மழை நீரை வெளியேற்றி வருகின்றனர்.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘மண்டலத்தில், 69 மின் மோட்டார் வாயிலாக மழை நீர் தேங்கும் இடங்களில் உடனுக்குடன் வெளியேற்றி வருகிறோம். மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உதவிகளும் வழங்கப்படுகிறது’ என்றனர்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *