Share on Social Media


லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோரில் ரூ.1.16 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட சாலையைத் திறந்து வைக்க எம்.எல்.ஏ.,வை அழைத்தனர். அவர் தேங்காய் உடைத்து திறந்து வைக்க முயன்ற போது தேங்காய் பட்டு சாலையும் சிதறியது.

உ.பி., மாநிலம் பிஜ்னோர் சதார் தொகுதியின் எம்.எல்.ஏ., சுசி மவுசம் சவுத்ரி. இவர் தனது தொகுதியில் நீர்பாசனத் துறையினரால் ரூ.1.16 கோடி செலவில் அமைக்கப்பட்ட சாலையை திறந்து வைப்பதற்காக அழைக்கப்பட்டார்.

சடங்கிற்காக சூரத், தேங்காயை புதிய சாலையில் உடைத்துள்ளார். தேங்காயோடு சேர்ந்து சாலையும் சிதறியுள்ளது. இதனைக் கண்டு கோபமடைந்த அவர் அதிகாரிகளை வரவழைத்து மாதிரிகளை எடுத்துச் சென்று ஆய்வு செய்ய கோரினார்.

latest tamil news

மாதிரிகளை எடுக்கும் வரை சுமார் 3 மணி நேரம் அங்கே இருந்தார் எம்.எல்.ஏ., இது பற்றி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சாலையை திறந்து வைக்கச் சொன்னார்கள். அங்கு வந்து தேங்காய் உடைக்க முயன்றபோது சாலையின் சிறு துண்டுகள் சிதறி வெளியேறியது.

கட்டுமானத்தில் குறைபாடு இருப்பதைக் கண்டறிந்தேன். பணிகள் தரமானதாக இல்லை. திறப்பு விழாவை நிறுத்திவிட்டோம். மாவட்ட ஆட்சியரிடம் பேசினேன். 3 பேர் கொண்ட குழுவை அமைத்தார். சாலையின் மாதிரிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தரமற்ற சாலைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *