Share on Social Media


சின்னசேலம்-தெலுங்கானாவிலிருந்து 2,600 டன் ரேஷன் அரிசி ரயில் மூலம் சின்னசேலம் கொண்டு வரப்பட்டது.நாடு முழுதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஏராளமான மக்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.இதனால், மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் கூடுதலாக இலவச அரிசி வழங்கி வருகின்றனர். அதற்காக நேற்று, தெலுங்கானா மாநிலம், யதாத்ரி புவனகிரி மாவட்டத்திலிருந்து 53 ஆயிரம் மூட்டைகளில், 2600 டன் புழுங்கல் அரிசி நேற்று காலை ரயில் மூலம் சின்னசேலம் வந்தடைந்தது.42 ரயில் பெட்டிகளில் வந்த அரிசி மூட்டைகளை லாரிகளில் ஏற்றி தமிழ்நாடு சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.முன்னதாக, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு மேலாளர் பிரபு மேற்பார்வையில், இந்திய உணவுக் கழக மேலாளர் வெங்கடாசலம், உதவி ஆய்வாளர் திருநீலகண்டன், துணை கிடங்கு மேலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் மூட்டைகளை ஆய்வு செய்தனர்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *