Share on Social Media


பல்லாவரம் – -துரைப்பாக்கம் ரேடியல் சாலையை, கிழக்கு கடற்கரை சாலையில் இணைக்கும் முதற்கட்ட பணி, 192 கோடி ரூபாய் செலவில் துவங்கியுள்ளது.சென்னையில், இ.சி.ஆர்., மற்றும் ஒ.எம்.ஆர்., முக்கிய சாலைகளாக உள்ளன.

இ.சி.ஆரில் பொழுதுபோக்கு மையங்களும், ஒ.எம்.ஆரில் ஐ.டி., நிறுவனங்கள், அடுக்கமாடி குடியிருப்புகளும் அதிகமாக உள்ளன.சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி செல்பவர்கள், இந்த இரு சாலைகளையும் பயன்படுத்துவதால், சென்னையின் நுழைவு வாயிலாக உள்ளது. ‘மாஸ்டர் பிளான்’சென்னையின் முக்கிய பகுதிகளில் இருந்து, இந்த இரு சாலைகளுக்கும் செல்ல, வேளச்சேரி – -தாம்பரம் சாலை மற்றும் பல்லாவரம்- – துரைப்பாக்கம் ரேடியல் சாலை ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன.வேளச்சேரி, பல்லாவரம், தாம்பரம், துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஓ.எம்.ஆரில், சோழிங்கநல்லுார் சந்திப்பில் இருந்து, கலைஞர் கருணாநிதி சாலை வழியாக இ.சி.ஆர்., செல்ல வேண்டும்.

தவிர, தரமணி சிக்னல் சென்று, திருவான்மியூர் வழியாக, இ.சி.ஆர்., செல்ல வேண்டும். ஓ.எம்.ஆரில், தரமணி சிக்னலில் இருந்து சோழிங்கநல்லுார் சந்திப்பு 10 கி.மீ., துாரம் கொண்டது. இந்த இடைப்பட்ட துாரத்தில், துரிதமாக இ.சி.ஆர்., செல்ல இணைப்பு சாலை இல்லை. இதன் காரணமாக, ஓ.எம்.ஆரில், போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.ரேடியல் சாலையில் இருந்து, இ.சி.ஆருக்கு துரிதமாக செல்லவும், ஓ.எம்.ஆரில் நெரிசலை குறைக்கவும், ரேடியல் சாலையை, இ.சி.ஆருடன் இணைக்க, 2008ம் ஆண்டு, சி.எம்.டி.ஏ., மாஸ்டர் பிளானில் திட்டமிடப்பட்டு, 2018ல் இத்திட்டம் செயல்வடிவம் பெற்றது.தற்போதுள்ள ரேடியல் சாலை, 10.6 கி.மீ., துாரம் கொண்டது. இந்த சாலை, ஒ.எம்.ஆர்., துரைப்பாக்கம் சிக்னலுடன் முடிகிறது.

இதிலிருந்து நேராக, 1.5 கி.மீ., துாரத்தில், 100 அடி அகலத்தில் புதிய சாலை அமைத்து, நீலாங்கரையில் இணைக்கப்பட உள்ளது.இரண்டு கட்டம்இப்பணியை, மாநில நெடுஞ்சாலைத் துறை செய்கிறது. துரைப்பாக்கம் சிக்னலில் இருந்து பகிங்ஹாம் கால்வாய் வரை மற்றும் அங்கிருந்து நீலாங்கரை வரை என, இரண்டு கட்டமாக சாலை அமைய உள்ளது.இதில், ஆக்கிரமிரப்பு அகற்றம், நிலம் எடுப்பு பணி உள்ளது. முதற்கட்டமாக, மொத்தமாக நிலம் எடுப்பு மற்றும் துரைப்பாக்கத்தில் இருந்து பகிங்ஹாம் கால்வாய் வரை, 0.75 கி.மீ., துாரத்தில் சாலை அமைக்க, 192 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.சாலை துவங்கும் இடத்தில் இருந்த அரசு பள்ளி இடிக்கப்பட்டு, மாற்று இடத்தில் கட்டப்பட்டது.

கால்வாய் வரை சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.துரைப்பாக்கம் சிக்னலில் இருந்து, பகிங்ஹாம் கால்வாய் வரை, நிலம் எடுப்பு பணி முடிந்து, சாலை பணி நடக்கிறது. அடுத்த கட்டமாக, பகிங்ஹாம் கால்வாயில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை வரை, 0.75 கி.மீ., துாரத்தில் நிலம் எடுப்பு பணி நடைபெற உள்ளது. விரைவில் இந்த பணியும் துவங்கும்.நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்இலகு ரக வாகனங்கள் அனுமதி துரைப்பாக்கத்தில் இருந்து, பகிங்ஹாம் கால்வாய் வரை நடைபெறும் சாலை பணி ஓராண்டில் முடியும். இரண்டாம் கட்ட பணி முடிந்தால் தான், இ.சி.ஆருக்கு நேராக செல்ல முடியும். அதுவரை, இலகு ரக வாகனங்கள், பகிங்ஹாம் கால்வாய் ஒட்டிய பாண்டியன் சாலை மற்றும் மஸ்ஜித் தெரு வழியாக, இ.சி.ஆர்., செல்ல நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

ரேடியல் சாலை பெயர் மாறும்!தற்போது துரைப்பாக்கம் சிக்னலுடன் ரேடியல் சாலை முடிவதால், ‘பல்லாவரம் – -துரைப்பாக்கம் ரேடியல் சாலை’ என, அழைக்கப்படுகிறது. இணைப்பு சாலை பணி முடிந்ததும், ‘பல்லாவரம் – -கிழக்கு கடற்கரை ரேடியல் சாலை’ என, அழைக்கப்படும். இதோடு தற்போது, 10.6 கி.மீ., உள்ள ரேடியல் சாலை, இணைப்புக்கு பின், 12 கி.மீ., துாரமாக அதிகரிக்கும்.

– -நமது நிருபர்-

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *