Share on Social Media


புதுச்சேரி : ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெளிப்புற சிகிச்சை சேவை, சில கட்டுப்பாடுகளுடன், நாளை முதல், மீண்டும் துவக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக மருத்துவமனை கண்காணிப்பாளர், அனைத்து துறைகளுக்கும் சுற்றிக்கை அனுப்பி உள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரையிலான நாட்களில் முழு நாளும், சனிக்கிழமையில் காலை 8.௦௦ மணி முதல் பகல் 12.௦௦ வரை வெளிப்புற சிகிச்சைப் பிரிவு செயல்பட உள்ளது.வெளிப்புற சிகிச்சை பெற விரும்புவோர், மொபைல் போன் மூலம் முன் அனுமதி பெற்று, மருத்துவருடன் தொலைமருத்துவ கலந்தாலோசனை பெற முடியும். இதற்காக, ஒவ்வொரு துறைக்கும் மொபைல் எண்களின் விவரங்கள் www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

கலந்தாலோசனையின் போது, நேரில் மருத்துவ ஆய்வு தேவைப்படும் நோயாளிகளுக்கு மட்டும், ஜிப்மர் மருத்துவமனைக்கு வருவதற்கான குறுஞ்செய்தியை மருத்துவர் அனுப்புவார்.மருத்துவமனைக்கு வருவோர், முகக்கவசம் அணிவது கட்டாயம். முன் அனுமதிக்கான குறுஞ்செய்தியை உறுதி செய்து, அனுமதிக்கப்படுவர். ஒரு நாளைக்கு ஒவ்வொரு துறையிலும் அதிகபட்சமாக 25 பேரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள், கொரோனா தொற்று பரவுவதை தடுக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *