Share on Social Media


துல்கர் சல்மான் ‘புலி’ : நெட்பிளிக்ஸ் பாராட்டு

23 டிச, 2020 – 11:25 IST

எழுத்தின் அளவு:


Netflix-congrats-Dulquer-Salman

கொரோனா தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன.. கடந்த எட்டு மாதங்களில் ஓடிடியில் நிறைய படங்கள் வெளியானாலும் கூட வெகு சில படங்களே ஹிட் அடித்தன. அந்தவகையில் துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், வரனே ஆவிஷ்யமுண்டு, மற்றும் துல்கர் தயாரிப்பில், அனுபமா பரமேஸ்வரன் நடித்த ‘மணியறையில் அசோகன்’ ஆகிய படங்கள் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பானது.

இந்த மூன்று படங்களுமே நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு நல்ல லாபத்தை பெற்று தந்துள்ளன. அதை குறிப்பிட்டு, துல்கர் சல்மானை பாரட்டும் விதமாக ‘துல்கர் புலியடா’ என தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அடுத்து வெளியாவதற்கு தயாராக இருக்கும் துல்கர் சல்மானின் ‘குறூப்’ படத்தையும் நெட்பிளிக்ஸ் தான் ரிலீஸ் செய்யப்போகிறது என்றும் அதன் முன்னோட்டமாகத்தான் துல்கர் சல்மானுக்கு இப்படி ஒரு பாராட்டை தெரிவித்துள்ளது என்றும் ரசிகர்கள் மத்தியில் பேசிக் கொள்ளப்படுகிறது.





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *