Share on Social Media


துல்கர்-காஜல் நடிக்கும் ஹே சினாமிகா படப்பிடிப்பு நிறைவு

29 டிச, 2020 – 06:59 IST

எழுத்தின் அளவு:


hey-sinamika-in-finishing-stage

கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி வரும் பிருந்தா மாஸ்டர், தமிழ் தவிர மலையாளம் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் அதிக அளவு படங்களுக்கு நடன வடிவமைப்பு செய்து வருகிறார். இந்தநிலையில் பிரபுதேவா, லாரன்ஸ், ஆகியோரின் வரிசையில், ‘ஹே சினாமிகா’ என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார் பிருந்தா.

துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்க, காஜல் அகர்வால், அதிதி ராவ் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஓரளவு வளர்ந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக இடையில் நிறுத்தப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன் மீண்டும் துவங்கி நடைபெற்று வந்த இந்தப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் தற்போது முடிவடைந்து விட்டது.. படக்குழுவினருடன் துல்கர் சல்மான், பிருந்தா ஆகியோர் படப்பிடிப்பின் இறுதிநாளை கொண்டாடிய புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *