Share on Social Media

புதுடில்லி: பல முறை ஒத்திவைக்கப்பட்ட ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப், டில்லியில் இருந்து துபாய்க்கு மாற்றப்பட்டது.

இந்தியாவில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 2020 பிப்ரவரி மாதம் நடக்க இருந்தது. கொரோனா பரவல் காரணமாக கடந்த நவம்பர் – டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. பிறகு வரும் மே 21 முதல் 31 வரை டில்லி இந்திரா உள்ளரங்கு மைதானத்தில் நடக்க இருந்தது. 

ஆனால் இங்கு கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் இத்தொடர் டில்லியில் இருந்து துபாய்க்கு இடம் மாற்றப்பட்டது. இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,‘ஆண்கள், பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பை இந்தியாவில் நடத்துவதில் ஆர்வமாக இருந்தோம். ஆனால் துரதிருஷ்வசமாக சர்வதேச விமானங்கள் இந்தியா வர பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதுகுறித்து ஆசிய குத்துச்சண்டை கூட்டமைப்பிடம் பேசினோம். வேறு வழியில்லாத நிலையில் போட்டியை துபாயில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *