Share on Social Media


புதுடில்லி: துக்ளக் லாக்டவுனை அமல்படுத்தியது, மக்களை மணி அடிக்க செய்வது ஆகியவையே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை என காங்., எம்பி ராகுல் கிண்டல் அடித்து பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். திட்டமிடப்படாத ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், தற்போது தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டதையும் சுட்டிக்காட்டி ராகுல் விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை மத்திய அரசு கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து காங்., எம்பி., ராகுல் தனது டுவிட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்;
‛கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறையின் முதல் நடவடிக்கை, துக்ளக் லாக்டவுனை அமல்படுத்தியது, 2-வது நடவடிக்கை, மக்களை மணி அடிக்க செய்தல், மூன்றாவதாக, கடவுளைத் துதித்துப் பாடுதல்,’ எனப் பதிவிட்டுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை, டில்லியை ஆண்ட துக்ளக் வம்சத்தைச் சேர்ந்த முகமது பின் துக்ளக் போன்று, எதையும் திட்டமிடாமல், தன்னிச்சையாக இருப்பதை ராகுல் சுட்டிக்காட்டுவதாக கூறப்படுகிறது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *