Share on Social Media


இதனால், காங்கிரஸை மூன்று தசாப்தங்களாக ஆட்சிக்கு வரவிடாமல் வீட்டுக்குள் முடக்கியது கம்யூனிஸ்ட் கட்சி. 34 ஆண்டுகள் அவர்களின் ஆட்சி தொடர்ந்தது. ஜோதிபாசு இந்திய வரலாற்றில் நீண்டகால முதலமைச்சராக சாதனைப் படைத்தார். இவருக்கு அடுத்து புத்ததேவ் பட்டாச்சார்யா வந்தார். ஆனால், 2006- 2011 ஆட்சி காலத்தில் புத்ததேவ் மக்களின் நிலங்களை கையப்படுத்தி டாடா உள்ளிட்ட கார்ப்ரேட்டுகளுக்கு கொடுக்க முயற்சி செய்ய, மக்களைக் காக்கும் மீட்பரானார் மம்தா.

கம்யூனிஸ்ட்டா, காங்கிரஸா என்பது மாறி, கம்யூனிஸ்ட்டா, திரிணாமுல் காங்கிரஸா என்ற நிலைக்கு தன் கட்சியை கொண்டுவந்து நிறுத்தினார் மம்தா.

இப்போது மோடி பிரச்னையால் தலைமைச் செயலாளரை ஓய்வு பெற வைத்து தன்னுடைய ஆலோசகராக நியமித்தது போல 2011-லேயே கம்யூனிஸ்ட் அரசு மீது வெறுப்பில் இருந்த பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தன்னுடைய கட்சியின் வேட்பாளராக நிறுத்தினார் மம்தா. இதன் மூலம் அவர் சொல்ல வந்தது சாதாரண மக்கள் மட்டுமல்ல மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் உயரதிகாரிகளும், படித்தவர்களும்கூட ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதுதான்.

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

2011 சட்டமன்றத் தேர்தலுக்கு, ஆரம்பகாலத்திலேயே தன்னோடு வந்து இணைந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர், அறிவுசார் சமூகம், கம்யூனிஸ்டுகளின் ஆதரவாளர்களாக முன்னர் இருந்தவர்கள் என அத்தனை பேரையும் ஒன்றுதிரட்டி தன்னுடைய கட்சியின் வேட்பாளராக நிறுத்தினார். பா.ஜ.க-வோடு கூட்டணி அமைத்தால் முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காது என்பதைப் புரிந்துகொண்டு மீண்டும் காங்கிரஸோடு கூட்டணி அமைத்தார். எல்லா தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்திய மம்தா பானர்ஜி இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை.

மம்தா அலை நகரம், கிராமம் என எந்த வித்தியாசமும் இன்றி மேற்கு வங்கம் முழுக்க வீசியது. கம்யூனிஸ்ட் கட்சியை சுனாமி போல சுருட்டினார் மம்தா. ‘’தாய், தாய்மண், மக்கள்’’ என்கிற மம்தாவின் முழுக்கம் மேற்கு வங்கம் முழுக்க ஓங்கி ஒலித்ததால் மிகப்பெரிய வெற்றி பெற்றது திரிணாமுல் காங்கிரஸ்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *