Share on Social Media


செம்பாக்கம், : செம்பாக்கம் நகராட்சியில், வீடு வீடாக நடந்து வரும் கணக்கெடுப்பால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக நகராட்சி அதிகாரிகள் கூறினர்.

தாம்பரம் அருகே உள்ள செம்பாக்கம் நகராட்சியின் 15 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா அறிகுறியை கண்டறிய 52 குழுக்கள் அமைக்கப்பட்டன.இதில், 63,586 பேருக்கு நடத்தப்பட்ட முதற்கட்ட கணக்கெடுப்பில் 105 பேருக்கு சளி, இருமல், காய்ச்சல், மூச்சு திணறல் இருப்பது தெரிந்தது. அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 28 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதும், அவர்களில் ஒருவர், கடுமையான மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருவதும் உறுதியானது.மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டவர், ராஜிவ்காந்தி மருத்துவமனையிலும், மற்ற 27 பேர், அருகில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களிலும், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக, நகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதேநேரம், மீதமுள்ள 77 பேருக்கு, சத்து மாத்திரைகள், கபசுர குடிநீர் ஆகியவை கொடுக்கப் பட்டு, தன்னார்வலர்கள் வாயிலாக, கண்காணிக்கப்பட்டு வருவதுடன், இரண்டாம்கட்ட கணக்கெடுப்பு பணிகள் துவங்கி உள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *