Share on Social Media


புதுடில்லி : எதிர்க்கட்சிகளை சேர்ந்த ௧௨ எம்.பி.,க்கள் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ஐந்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் மத்திய அரசு தரப்பில் இன்று பேச்சு நடத்தப்படுகிறது.

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரில் ராஜ்யசபாவில் ஒழுங்கீனமாக செயல்பட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பி.,க்கள் குளிர்கால கூட்டத் தொடர் முழுவதற்கும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் சபை நடவடிக்கைகள் முடங்குகின்றன. முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பி.,க்களும் தினமும் பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் போராட்டம் நடத்தி வருகின்றனர். கூட்டத்தொடர் முடிய இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
காங்கிரஸ், திரிணமுல், சிவசேனா, இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கு இது தொடர்பாக பேச்சு நடத்த வரும்படி பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.